இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி?

0
2257

இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் முக்கிய குற்றங்களான பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7 குற்றங்களை வைத்து ஆய்வு செய்துள்ளனர். அதில் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி?

நாட்டின் பல்வேறு நகரங்கள் பெண்கள் பாதகாப்பற்றதாக தான் மாறி வரும் சூழலில் தான் உருவாகிக் கொண்டியிருக்கிறது. அதிலும் டெல்லி நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை. அங்கு பாலியல் பலாத்காரம், ஈவ்டீசிங் அடிக்கடி நடக்கும். வர்த்தக நகரமான மும்பையிலும் அதே நிலைதான். இந்தியாவின் இன்டர்நெட் நகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருவில், புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் செய்தியை நாம் தினமும் படித்துக் கொண்டியிருக்கிறோம்.

இந்தியா முழுவதும் 53 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவில் ஜோத்பூர் இருக்கிறது. கோவையில் 0.01 குற்றச் செயல் என்றால் ஜோத்பூரில் 0.54 என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் நிகழ்கிறது. வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நன்றாக படிக்க வைப்பது, பொதுவாகவே பெண்களை மரியாதையாக பார்க்கும் கண்ணோட்டம் கோவைவாசிகளிடம் இருக்கிறதாம். பெண்களை மரியாதையாக நடத்துவதிலும் கோவை முதலிடம் பிடிக்கிறது.
பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை தலைநகர் சென்னை பிடித்திருக்கிறது. ஐந்தாவது இடத்தை திருச்சி 0.03 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் பெற்றுள்ளன. அதே வேளையில் பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்த தமிழக நகரங்களும் இடம் பெறவில்லை என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இது வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை.

கோவை 0.01, சென்னை 0.01, சூரத் 0.3, கண்ணூர் 0.03, திருச்சி 0.03, அகமதாபாத் 0.04, மலப்புரம் 0.05, வதோரா 0.06, ராஜ்கோட் 0.06, கொல்கத்தா 0.07. சென்னை, கொல்கத்தா ஆகிய இரண்டு மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் ஜோத்பூர் 0.54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 0. 47 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. பாட்னா, கேட்டா, குவாலியர், அசன்சால், விஜயவாடா, பரீதாபாத், மீரட், ஜெய்ப்பூர் நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

“பெண்கள் நாட்டின் கண்கள்”, “பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்” இப்படி பெண்களை தெய்வமாக கொண்டாடும் இந்த நாட்டில் தான் பெண்கள் ஆண்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். என்னதான் பெண்களும் ஆண்களுக்கு இணையான அவர்களும் முன்னேறி வந்தாலும் இந்த சமூகத்தில் வேறு ஆண்களால் பல கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். நாம் மாறும் வரை மாற்றம் உருவாகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here