ஓரே படுக்கையில் கரைந்து போன 75 வருட காதல் வாழ்க்கை..!

0
2004

உன்னதமான காதல், ஒரே சமயத்தில் கணவன், மனைவி இறப்பது எல்லாம் சினிமாவிலும் இதிகாசங்களிலும் தான் நாம் பார்ப்போம். எப்பவாவதுதான் சில உருக்கமான காதல் கதைகளை கேள்விப்படுவோம். அப்படித்தான் இந்த காதல் கதையும்.

பொதுவாக திருமணம் ஆவதற்கு முன் வரும் காதல்தான் மிகவும் உன்னதமாகவும், ஒரு கிளர்ச்சியை தருவது போலவும், இருக்கும். உருகி உருகி காதல் செய்தவர்கள் கூட திரு மணம் ஆனதும், சுவாரசியம் இழந்து ஏனோ தானோவென வாழ்க்கை நடத்த ஆரம்பித்து விடுவார்கள்.

திருமணத்திற்கு முன் காதல் செய்வது பெரிதில்லை. மணம் செய்த பின் ஒற்றுமையாய் வாழ்பவர்கள்தான் மிகவும் குறைவு . அவர்கள் தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள். அப்படித் தான் இந்த காதல் கதையும்..

கலிஃபோர்னியாவில் 75 வருடங்களாக காதல் தம்பதியாக வாழ்ந்தவர்கள் அலெக்ஸாண்டர், ஜீனத் இருவரும். எட்டு வயது முதல் இருவரும் அறிமுகமாகி நண்பர்களாக இருந்தனர். பின்ன்ர் திருமண வயதான பின் இருவரும் முடிவெடுத்து 1940 ஆம் ஆண்டு மணம் செய்து கொண்டனர். இருபரும் 75 வருடங்கள் ஒற்றுமையாக அதே காதலுடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் அலெக்ஸாண்டருக்கு உடல் நலம் மோசமானது. அவரது வயது 95, அவரை மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நாளாக நாளாக உடல் நிலை மோசமானது.

அவரைக் கண்டு வேதனையுற்ற ஜீனத் அவர் அருகே இருந்து கவனித்தாலும், அவருடைய உடலும் பாதிப்புக்குள்ளானது. அவருக்கு வயது 96. மருத்துவ மனையில் அவர் அருகேயே தனது படுக்கையை அமைக்கும் படி மருத்துவ மனையில் அலெக்ஸாண்டரின் படுக்கைக்கு அருகேயே அவருக்கும் போடப்பட்டது.

ஒரு நாள் இரவில் அலெக்ஸாண்டரின் உயிர் பிறந்தது, அவர் அருகில் படுத்திருந்த ஜீனத்திற்கு தெரியவில்லை. அவருடைய மகள் பெருந் தயக்கத்துடன் தன் அப்பா இறந்ததை கூறினார்.

உடனே ஜீனத் அலெக்ஸாண்டரை கட்டிப் பிடித்து ” யூ. ஸீ ! இதுக்குதானே ஆசைப்பட்டாய். என்னோட தோளில்தன் உயிர் போகனும்னு சொல்வியே. அப்படித்தானே இன்னைக்கு உன் உயிர் போயிருக்கு. எனக்காக காத்திரு! விரைவில் உன்னுடன் சேர்வேன்” என்று கூறியிருக்கிறார்.

அவர் இறந்த மறு நாள் காலையில் அதே படுக்கையில் ஜீனத்தின் உயிரும் போனது. இது அவர்களின் பில்ளைகள் மற்றும் மருத்துவ மனையில் இருப்பவர்களுக்கு தாங்க முடியாத ஆச்சரியம் மற்றும் மனதை நெகிழ்விக்கும்படி இருந்தது அவர்களின் இறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here