2 லட்ச ரூபாய்க்கு தெர்மாகோல் கேக்.. அதிர்ச்சி அடைந்த திருமண ஜோடி..!

0
499

திருமண நிகழ்ச்சியில் நாம் வித்தியாசமான பல பிரச்சனைகளைப் பார்த்திருப்போம் ஆனால் இங்க நடந்திருப்பதைப் பார்த்தால் சிரிப்பதா இல்லை வருத்தப்படுவதா என்பது தெரியவில்லை.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு ஜோடி தங்களது திருமணத்திற்காகச் சுமார் 1,40,000 பீசோ செலவு செய்து உணவு, அலங்காரம், பிற மேற்பார்வை ஆகியவற்றுக்குச் செலவு செய்துள்ளது.

டமாயோ மற்றும் ஜான் ஜோடி நீண்ட நாள் திட்டமிட்டு தங்களது திருமணத்திற்காக அனைத்து விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில் திருமணத்தில் பிரம்மாண்ட கேக் வெட்டவும் திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் ஆர்டர் செய்த பிரம்மாண்டமான கேக் வெட்டிய போது டமாயோ மற்றும் ஜான்-க்கும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. ஆம் நம்ம செல்லூர் ராஜ் போன்ற ஒரு விஞ்ஞானி ஒருவர் கேகிற்குப் பதிலாகத் தெர்மாகோலை கொண்டு தயாரித்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

இந்தத் தெர்மாலகோல் கேக் தற்போது உலகம் முழுவதும் டிரென்டாகியுள்ளது.

இதுமட்டும் அல்லாமல் திருமண ஜோடி ஆர்டர் செய்த உணவுகளும் அளிக்கப்படாத நிலையில் அருகில் இருக்கும் உணவகத்தில் விருந்தினருக்கு நூடில்ஸ் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தத் திருமண ஜோடி போலீஸில் புகார் அளித்த நிலையில் கேட்ரிங் ஆட்கள் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது நடந்து வரும் திருமண மோசடியில் இதுவும் ஒன்று எனத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here