கருவளையம், முகப்பருக்கள் அசிங்கமா தெரியுதா? ஒருபிடி கொத்துமல்லி எடுத்துக்கோங்க!!

0
42

கொத்துமல்லியும், புதினாவும் ஒரே வகையைச் சேர்ந்த குணம்தான். இரண்டுமே ஏறக்குறைய ஒரே மாதிரியான பண்புகளையும் காரத்தன்மையும் கொண்டது.

கொத்துமல்லி ஜீரணத்திற்கு நல்லது. அது போலவே சரும பாதிப்புகளையும் சரிப்படுத்தும் தெரியுமா? சருமத் தொற்று நோய்களைப் போக்கி, முகப்பரு, கருவளையம், கருமை வெயிலினால் உண்டான சரும நோய்கள்
எல்லாவ்ற்றைற்கும் சிறந்த தீர்வளிக்கும்.

கொத்துமல்லி விதைகளை வீட்டில் ஒரு மண்தொட்டியில் விதைத்தாலே ஃப்ரெஷான கொத்தும்மல்லி இலைகள் கிடைக்கும் அதனை எப்படி கருவளையம் போக்க பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

கருவளையம் போக்க :

கொத்துமல்லிச் சாறை எடுத்து அதனை பஞ்சினால் நனைத்து இரு கண்களிலும் கருவளையத்தில் பூசிடுங்கள். இரவு தூக்கத்திற்கு முன் செய்ய வேண்டும். மறு நாள் காலை எழுந்து கழுவிக் கொள்ளலாம். இப்படி தினமும் செய்து வந்தால் கருவளையம் வெகு சீக்கிரத்தில் மறைந்துவிடும்.

கரும்புள்ளி மறைய :

கொத்துமல்லியை மசித்து முகத்தில் பூசி சில நிமிடங்களில் கழுவினால், முகம் உடனுக்குடன் சுத்தமடைந்து
பளபளப்பாய் காட்சி தரும்.

சரும அலரிஜிக்கு :

கொத்துமல்லி சாறை எடுத்து அதனுடன் தேன் கலந்து உடலில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்தால் தோல் தடிப்பு, சரும அலர்ஜி, அரிப்பும் குணமாகும். சரும பிரச்சனைகள் மறையும். தேகம் வசீகரமாக மாறும்.

முகப்பருக்கள் மற்றும் அதிக எண்ணெய் வடிதலுக்கு :

தேவையானவை :
கொத்துமல்லிச் சாறு – கால் கப்
துளசி சாறு – கால் கப்
சந்தனம்- 1 ஸ்பூன்

முகப்பருக்களுக்கும் அதிக எண்ணெய் வடிதலுக்கும் கொத்துமல்லி அருமருந்தாகும். கொத்து மல்லி சாறு மற்றும் துளசிச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் சந்தனத்தையும் கலந்து முகத்தில் தடவுங்கள்.

காய்ந்ததும் கழுவ வேண்டும். மிக அற்புதமான பலனைத் தரும். பருக்கள் குணமாகி தன் தழும்புகளும் மறையும்.

பொடுகைப் போக்க :

கொத்து மல்லி சாறு எடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கால் கப் தயிர் கலந்து தலையில் ஸ்கால்ப்பில் தடவி ஊற வையுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு உடனேயே மறைந்து விடும். வாரம் ஒரு முறை செய்தால் புதிய முடிகள் வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here