அம்பானி வீட்டில் அடுத்தக் கெட்டிமேளம்.. பிசியாகும் மும்பை..

0
566

நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகளுக்குச் சில வாரங்களுக்கு முன் பிராமல் குழுமத்தின் வாரிசுடன் திருமணமானது. இந்தத் திருமணத்தால் ஒட்டுமொத்த மொத்த மும்பை பிரபலங்களும் தயாராகினர்.

இந்நிலையில் சில வாரங்களின் இடைவெளியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக உறுப்பினரும், ஜியோ நிறுவனத்தின் தலைவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்குத் திருமணம் நடக்க உள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் அமைதியான முறையில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஸ்லோகா மேத்தா ஆகியோருக்கு நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், முதலில் மகளுக்குக் கல்யாணம் செய்ய வேண்டும் என முடிவு செய்த முகேஷ் அம்பானி, தனது ஓரே மகள் ஈஷா அம்பானிக்கு உலகமே வியக்கும் வகையில் திருமணத்தை நடத்தினார். தற்போது மகனின் திருமணம் நடக்க உள்ளது.

திருமணத்தின் மொத்த விபரமும் இதோ உங்களுக்காக.

பேட்சுலர் பார்ட்டி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் பேட்சுலர் பார்ட்டி எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை செய்யும் முன்னரே விபரம் உங்களுக்கு.

பிப்ரவரி 23 மற்றும் 25ஆம் தேதி சுவிஸ்-ல் செயின்ட் மோரீட்ஸ் பகுதியில் பேட்சுலர் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார் ஆகாஷ் அம்பானி. சுமார் 500 பேர் கலந்துகொள்ளும் இந்தப் பாட்டியில் ஆகாஷ்-இன் நெருங்கிய நண்பர்கள், பாலிவுட் பிரபலங்கள் என ஒட்டுமொத்த மும்பை பெரிய தலைகளும் சுவிஸ் செல்ல உள்ளது.

500 பேரை சுவிஸ்க்கு கூட்டி செல்ல 2 விமானங்கள் புக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம்

மார்ச் 9ஆம் தேதி மும்பையில் இருக்கும் ஜியோ வோர்ல்டு சென்டரில் திருமணம் நடை பெற உள்ளது.

இதைதொடர்ந்து திருமணத்தின் அடுத்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்ச் 10ஆம் தேதி இதே இடத்தில் தொடர்கிறது.

ரிசெப்ஷன்

இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ளும் ரிசெப்ஷன் இதே இடத்தில் மார்ச்11ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஈஷா அம்பானி

மகளின் திருமணத்தை உலகமே வியக்கும் வண்ணம் நடத்திய முகேஷ் அம்பானி மகனின் கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்த திட்டமிட்டுள்ளார் என்று பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here