அரசு ஊழியர்களுக்கு இனி ஜாக்பாட் தான்.. மத்திய அரசு திடீர் முடிவு..!

2
8525

பொதுத்துறை நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு நிர்ணயம் செய்யும் சம்பள அளவுகள் அரசு அறிவித்துள்ள அளவுகளை விடவும் அதிகமாக அளிக்க இனி அரசிடம் அனுமதி பெற தேவையில்லை என அறிவித்துள்ளது பெருநிறுவன விவகார அமைச்சகம்.

அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவுகளை விடவும் அதிகச் சம்பளம் அளிக்க நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் அனுமதி பெற்றால் போதும் எனப் பெருநிறுவன விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவைச் சிறப்பு உத்தரவின் மூலம் செய்துகொள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது கடனில் மிதக்கும் நிலையில், இவர்களுக்கு இதே உரிமையைக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசு. அதிகக் கடனில் வங்கி திவால் பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் அளவைத் தாண்டும் போது நிறுவன சட்டம் 2013இன் படி பெருநிறுவன விவகார அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது 70,000 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய விதிகள் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சம்பளம் குறித்து மத்திய அரசிடம் நிர்வாகம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது இல்லை. மேலும் இந்த மாற்றங்கள் வரும் புதன்கிழமை முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.

மேலும் புதிய விதிமாற்றங்கள் மூலம் உயர் பதவிகளில் இருப்பவர்களும், உயர் அதிகாரிகள் தொடர்பில் இருக்கும் அதிகாரிகளுக்குப் பொதுத்துறை நிறுவனங்களில் அதிகச் சம்பளத்தில் வேலைக் கிடைக்கும். மேலும் திறன் வாய்ந்தவர்கள் இனி தனக்கான சம்பளத்தை உரிமையுடன் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here