மூட்டு வலியை தடுக்கும் தேங்காய் பால் சூப் செய்வது எப்படி?

0
538

இன்றைய காலத்தில் ஏறக்குறைய எல்லாருக்கும் ஒரு முக்கிய விட்டமின் சத்து குறைபாடு இருக்கிறதாக மருத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அது விட்டமின் பி காம்ப்ளக்ஸ். விட்டமின் பி குறைவாகும் போது எலும்பிற்கு போதிய அளவு கால்சியம் மற்றும் விட்டமின் டி தட்டுப்பாடும் உண்டாகும்.

அதே போல் வாய்ப்புண், இரைப்பையில் அதிக அமைலச் சுரப்பும் உண்டாகும். மூட்டு இணைப்புச் சவ்வு வலிமை குறைந்து மூட்டு பாதிப்புகள் உண்டாகும். அகவே விட்டமின் பி நிறைந்த் உணவுகள் உண்பது இந்த காலத்தில் மிகவும் முக்கியம். அப்படி அதிக பி நிறைந்த உணவுதான் தேங்காய்ப் பால்…

தேங்காய் பால் சுவையானது. எல்லாருக்கும் பிடித்தமானது கூட. பொதுவாக தேங்காய் பால் பிரியாணிக்கு, ஆப்பம், குருமா போன்றவற்றிற்கு சேர்ப்போம். இன்னும் என்னெல்லாம் வகையில் சேர்க்க முடியுமோ அப்படி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

அவ்வகையில் தேங்காய்ப் பாலில் சுவையான சூப் கூட செய்யலாம். அதற்கான எளிமையான ரெசிபி இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருள்கள்:-

தேங்காய் பால் – 1 கப்
பசும்பால் – 1 கப்
பெரிய வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 5
இஞ்சி – சிறிது
கொத்தமல்லி தழை- சிறிது
எலுமிச்சை பழம் – பாதி அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
சோள மாவு – 2 ஸ்பூன்

செய்முறை:-

தேங்காயை துருவி அதை மிக்சியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யை விட்டு சன்னமாக நறுக்கிய வெங்காயத்தை நன்கு வதக்கவும்.

அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.

பின் கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொத்தித்த கலவையுடன் ஊற்றவும்.

நன்கு கொதி வந்த பின்பு தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கவும்.சுவையான(பசியை தூண்டகூடிய)ஆரோக்கியமான தேங்காய் பால் சூப் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here