மனித உடலுக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் இடையே உள்ள தொடர்பு!

0
946

ஒட்டுமொத்த உலகத்தின் மையப்புள்ளி இருக்கும் இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் இருப்பதை அறிந்து விஞ்ஞான உலகம் வியக்கிறது. துல்லியமான தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத அந்த காலத்தில் இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் என அதிசயிக்கிறது. மேலும், சர்வதேச ஆன்மீக அமைப்புகள் கடந்த எட்டு ஆண்டுகளாக சில கோடி டாலர்கள் செலவு செய்து, தீவிர ஆராய்ச்சிக்குப்பின் பூமியின் காந்த மையப்புள்ளி சிதம்பர நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாக கண்டுபிடித்திருப்பது தான் உச்சக்கட்ட ஆச்சரியம் என்கிறார்கள். வாருங்கள் இக்கட்டுரையில் சிதம்பரம் நடராஜர் சிலையில் பொதிந்துள்ள
ரகசியங்கள் மற்றும் அதன் வியக்கவைக்கும் காரணங்களைப் பற்றி பார்போம்.

5000 வருட பழமை:

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற புகழான சைவ சமய புலவர்களால் தேவார பாடலில் பாடப்பட்ட தில்லையம்பலத்து திருத்தலம் கட்டப்பட்டது 1000- 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் என ஆய்வுகள் கூறினாலும், 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருமூலர் பாடிய திருமந்திரத்திலேயே இக்கோயில் இடம்பெற்றுள்ளது. பழங்காலத்திலிருந்தே திருமூலர், பதஞ்சலி முனிவர், வியாக்கியபாதர் போன்ற முனிவர்களாலும் வணங்கப்பட்டுள்ளது.

மனித உடலோடு தொடர்பு:

நம் அறிவுக்கு எட்டியதும் எட்டாததுமாக அறிவியல் பூர்வமான பல உண்மைகள் விஞ்ஞானத்தோடு மட்டுமல்லாமல் மனித உடற்கூறுகளோடும் சம்பந்தப்பட்டுள்ளது.
அணுத்துகள்கள் அசைந்தபடியே இருக்கும் என்பதை நடனமாடும் நடராஜர் சிலை மூலம் உணர்த்தி, அதை காந்த சக்தியின் மையத்தில் வைத்து கோயில் கட்டியுள்ளனர். இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது வாசல், மனித உடலில் ஒன்பது துளைகள் இருப்பதை குறிக்கிறது. கோயில் விமானத்தின் மேலே உள்ள பொற்கூரை 21,600 தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் ஒரு நாளைக்கான சராசரி சுவாசம் 21,600 தடவையாகும். அந்த தகடுகளைப் பொறுத்த 72 ஆயிரம் தங்க ஆணிகள், அது மனித உடலில் உள்ள மொத்த நாடிகளின் எண்ணிக்கையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here