உங்கள் ஆயுளை 12 வினாடிகள் அதிகரிக்கும் சிதம்பரம் கோயில் மணி!

0
175403

தில்லையம்பலத்தில் உள்ள சிதம்பர ரகசியம் பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். நடராஜர் கோயில் அமைந்துள்ள இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என கூறப்படுகிறது. அறிவியல், பொறியியல், புவியியல் மட்டுமல்லாது மருத்துவப் பலன்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் எம்பெருமான் நடராஜர். ஒவ்வொரு ஆச்சரியத்திலும் பண்டைய தமிழர்களின் அறிவுப்பூர்வம் பதிந்துள்ளது.

சிதம்பர ரகசியத்தில் ஒன்றாக திகழும் மணியைப் பற்றிதான் இங்கே தெரிந்துகொள்ள போகிறோம். இந்த மணியின் ஓசையை கேட்டால் நமது வாழ்நாளில் 12 வினாடிகள் அதிகரிக்கும் என்பது ஆச்சரியத்தின் உச்சக்கட்டம்.

சிகண்டி பூரணம்:
சிவபெருமான் அம்பலக்கூத்தாடிய சிதம்பரத்தில் உள்ள ஆலய மணி உலகின் மிகச் சிறந்த மணி என கருதப்படுகிறது. சித்தர்கள் இந்த மணியை சிகண்டி பூரணம் என்று அழைப்பார்கள்.

ஆழ்நிலை தியானத்திற்கு:
இந்த மணியில் இருந்து வரும் ஓசையானது நம்மை எளிதில் ஆழ்நிலை தியானத்தில் ஆழ்த்திவிடும் சக்தி வாய்ந்தது. தியானத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்புபவர்கள் இந்த சிகண்டி பூரண மணியின் ஓசை எழுப்பப்படும்போது தியானம் மேற்கொள்ள வேண்டும்.

வள்ளலார்:
வள்ளலார் பெருமானுக்கு அருளும், கடாட்சமும் அளித்த மணியும் இந்த சிதம்பரத்து மணிதான். மனிதனை சிவமாக்கும் வல்லமையும், விசேஷ சக்தியும் உடையது. இந்த மணியோசையை கேட்கும்போது தெய்வீகத்தின் உச்சத்தை உணர்வீகள்.

ஆயுள் கூடும்:
இந்த சிகண்டி பூரண மணியின் ஓசையை மனிதர்கள் கேட்கும்போது வாழ்நாள் ஆயுளில் 12 வினாடிகள் அதிகரிக்கும் என்பது தில்லை திருத்தல வரலாறு. வாசகர்களின் நன்மைக்காக சிகண்டி பூரண மணியின் ஓசையின் MP3 கோப்பை இங்கே பதித்துள்ளோம். மணியோசையை கேட்டு நன்மை அடையுங்கள்.

இந்த பதிவை உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து இறையருள் பெற்றிட செய்யுங்கள்.

 

மினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here