சென்னை கடலில் ஏற்பட்ட ‘நீர் சூறாவளி’யின் பயங்கர பின்னணி… அதிர்ச்சி தரும் உண்மைகள்!

0
1216

சென்னை காசிமேட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வங்கக் கடலில் உள்ள நீரை வானில் இருந்து ஸ்ட்ரா போட்டு உருஞ்சியதைப் போல ஒரு அதிசய காட்சி தோன்றியது. பலரும் இதை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதைதான் நாம் நீர் சூறாவளி என்று அழைப்போம். அதாவது ஆங்கிலத்தில் Waterspout என அழைப்பார்கள்.

சூறாவளிகள்:

சூறாவளியில் பல வகைகள் உண்டு. மழை மேகங்களுடன் ஏற்படக் கூடிய சூறாவளிக்கு Supercell Tornadoes என்று பெயர். நிலத்தில் ஏற்படக் கூடிய சூறாவளியை Landspout என்று அழைப்பர். பலவீனமான சூறாவளி காற்றுக்கு Gustnado என பெயர். கடல், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூறாவளி Waterspout ஆகும். இது போன்ற சூறாவளிதான் தற்போது சென்னை வங்கத்தின் கரையோரத்தில் ஏற்பட்டிருக்கிறது. இது தவிர மாசுக்களில் ஏற்படக்கூடிய சூறாவளி (Dust Devils) , நெருப்புச் சூறாவளி (Fire Whirls) என மேலும் இரண்டு வகை சூறாவளிகள் உள்ளன.

ஆபத்தானதா?

சென்னையின் அருகே ஏற்பட்டுள்ள நீர் சூறாவளியானது மிகவும் ஆபத்தானதோ, அல்லது ஒரு நிலப்பரப்பை வேட்டையாடக் கூடிய சக்தி வாய்ந்ததோ இல்லை என்பதுதான் ஆச்சரியமான விடயம். இவ்வகை சூறாவளிகள் கடல் போன்ற பறந்து நீர்நிலையில் மட்டுமே அதிசக்தியுடன் தாக்கக் கூடிய திறன் படித்தவை. இந்த நீர் சூறாவளியால் கரையை தொட முடியாது என்பதுதான் இயற்கையின் நியதி. அதாவது கடலுக்குள் சுழன்று சுழன்று அடிக்கும் இந்த சூறாவளி நகர்ந்துகொண்டே நிலப்பரப்பை அடையும்போது முழு சக்தியையும் இழந்து விடும்.

அதிபயங்கரமானது: 

ஆனால், இதே நேரத்தில் கடலுக்குள் புகுந்து விளையாடும் இந்த வகை சூறவாளியானது நீரின் மேற்பரப்பில் இருக்கும் மிகப்பெரிய கப்பலையும் கூட தூக்கி சுற்றிவிடும் பயங்கர வல்லமை வாய்ந்தது. மேலும் இந்த சூறாவளியில் கடல் நீரானது உறிஞ்சப்ப்படும்போது, நீருக்குள் வாழும் ஜீவராசிகளும் சேர்ந்தே மேலே வானத்திற்குள் செல்கின்றன. பல நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த சூறாவளி நீரை சுழற்றியடிக்கும். நீர் மட்டத்திற்கு மேலே எவ்வளவு தூரம் எழும்புகிறதோ, அவ்வளவு தூரம் உள்ளே கடலினுள்ளும் இது ஆழ்ந்து பாய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here