போக்குவரத்தை சமாளிக்க வாடகை சைக்கிளுக்கு களமிறங்கும் சென்னை மாநகராட்சி!

0
301

சென்னையில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் நாளுக்கு நாள் கடும் அவதியடைகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசலை சமாலிக்க காவல் மற்றும் போக்குவரத்து துறைக்கு கடும் நெருக்கடியாகவே இருந்துவருகிறது. இதனை சமாலிக்க தற்போது சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இது நடைமுறையில் பழையவையானாலும், சென்னை மாநகராட்சி இதனை தற்போது நடைமுறைப்படுத்த உள்ளது.  போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்போது சைக்கிள் சாவாரி திட்டத்தை 5000 சைக்கிளுடம் 400 மையங்கள் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதனால் சுற்று சூழல் பாதுப்பையும் வலியுறுத்தி இத்திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. சைக்கிளை வாடகைக்கு எடுக்க இருக்கும் பயணி தனது ஆதார் எண்ணுடன் தனது விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். அவருக்கு ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் இதன் மூலம் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு பின் திருப்பி ஒப்படைக்க வேண்டும். திட்ட அறிமுகத்திற்காக முதல் அரை மணி நேரம் இலவசம் அதன் பின் ஒவ்வொரு மணிக்கு வாடகை வசூலிக்கப்படடும். சென்னையில் இதற்தாக அமைக்கப்பட்ட தனி பாதையில் செல்லலாம். வேறு நபர்கள் சென்றால் அபராதம் விதிக்கப்படும். இத்திட்டத்திற்கு சென்னை மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த அறிமுக திட்டத்தைப் பொருத்து மற்ற கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் கொண்டுவரப்படும். இத்திட்டத்தை தனியார் அமைப்புடன் ஒப்பந்த முறையில் சென்னை மாநகராட்சி துவங்க உள்ளது.விரைவில் இத்திட்டம் அமல்படுத்த உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here