முகத்தில் கரியை பூசினால் இவ்வளவு அதிசயங்கள் நடக்குமா?

0
1706

கரி எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது தெரியுமா? உங்களது சருமத்தையும், பற்களையும் ஆரோக்கியமாக, வெண்மையாக மாற்றும் தன்மை உடையது. குறிப்பாக கொட்டாங்குச்சி கரி அழகு பராமரிப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.

கொட்டாங்குச்சியை அதிக பாரன் ஹீட் வெப்பத்தில் நன்கு சாம்பலாகும் வரை எரித்து, பின்னர் அது வெளிநாடுகளுக்கு மூட்டை மூட்டையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பவுடரில் சில வாசனை திரவியங்களை கலந்து பவுடராகவும், பேஸ்ட்டாகவும், மாத்திரைகளாகவும் மாற்றி பாக்கெட்டில் போட்டு உலக அளவில் மார்க்கெட்டிங் செய்கின்றன சில புத்திசாலி நிறுவனங்கள். தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த கொட்டாங்குச்சி சாம்பல் மிக குறைந்த விலைகளில் வாங்கப்படுகிறது. கரியை பயன்படுத்தி கோல் மாஸ்க் போட்டு ஆண்களும் கூட ஜொலிக்கும் சருமத்தை பெற முடியும்.

#1 முகத்தில் கரி பூசி பத்து நிமிடங்கள் வரை மாஸ்க் போட்டு வந்தால் முகத்தில் உள்ள பருக்கள், பிம்பிள்ஸ் ஆகியவற்றை குறைக்க முடியும். இதனுடன் டீ-ட்ரீ எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து தடவினால் இன்னும் அழகான சருமம் கிடைக்கும்.

#2 கோல் மாஸ்க் உங்கள் சருமத்தினுள் புகுந்துள்ள தூசிகளை, பொல்யூஷனால் சருமத்தினுள் ஊடுருவியிருக்கும் கிருமிகளை எல்லாம் சுத்தமாக அழித்துவிடும்.

#3 கரி கொண்டு பற்களை விளக்கி வந்தால் பற்கள் வெண்மையாய் ஜொலிக்கும். ஜெம்ஸில் தங்கியிருக்கும் நுண் கிருமிகள் எல்லாம் அழிந்து, பற்களின் ஆரோக்கியம் மேம்படும். உறுதித்தன்மை அதிகரிக்கும். வலுவான, அழகான, நுர்நாற்றமற்ற பற்களை பெறலாம்.

#4 சிறிதளவு கரித்தூளில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கழுத்து, கைக்கு அடிப்புறம் மற்றும் முட்டிகளில் உள்ள கருமை அடைந்த பகுதிகளில் தேய்த்து 10 நிமிடங்கள் வரை காயவைத்து கலுவிவந்தால் அப்பகுதிகள் கூடிய விரைவில் வெண்மையாகும்.

#5 எண்ணெய் சருமமாக இருந்தால் கவலையே வேண்டாம். கரித்தூளில் 2 ஸ்பூன் அளவுக்கு ரோஸ் வாட்டர் ஊற்றி நன்கு குழைத்து முகத்தில் தடவினால் ஆயில்-ஸ்கின் பிரச்சினை ஓவர்.

#6 உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகளையும் கூட இந்த கோல் மாஸ்க் அழித்துவிடும். காற்றோட்டம் மிகுந்த மிருதுவான சருமத்தை உங்களுக்கு வழங்கும். கண்களுக்கு கீழே உள்ள கரு வளையத்தையும் கூட இந்த மாஸ்க் அகற்றிவிடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here