சாணக்கியன் விதிப்படி ஆண்கள் மற்றவரிடம் மறந்தும் சொல்லவேக் கூடாத 4 ரகசியங்கள்!!

0
405

ஸாணக்கியன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவரின் ராஜ தந்திரங்கள் பெரும்
ஆச்சரியத்திற்குட்ப்டுபவை.மிகச் சிறந்த பொருளாதார மேதை. பெரிய கல்வியாளர். சிறந்த ஆசிரியர். அவர் சொல்லும் விஷயங்கள் பல அரசர்களுக்கு வேதம். கச்சிதமாக நடக்கும் அவரின் கணிப்புகள். அவருடைய தந்திரங்கள் நமது நாட்டில் பிரசித்திப் பெற்றவை

அப்படிப்பட்டவர் ஆண்கள், நெறியாளர்கள், பெண்கள் , அரசர்கள் எப்படி இருக்க வேண்டும். எதைச் செய்யக் கூடாது. எப்படிப்பட்ட ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என பலவற்றை சொல்லியிருக்கிறார். அவகையில் ஆண்கள் சில ரகசிய்ங்களை எந்த காரணத்தை முன்னிட்டும் மற்றவர்களுடம் பகிரக் கூடாது . அவை இழிவான குணத்திற்கு ஒப்பானது மட்டுமல்ல, தர்ம சாஸ்திரத்தின்படி தவறு.

மேலும் இந்த ரகசியங்களை பகிரும்போது பிற்காலத்தில் பலப் பிரச்சனைகள் இதனால்
உண்டாகும் சூழ் நிலை உண்டாகும் என்று கூறியுள்ளார். அவற்றைப் பற்றி இங்கு
காண்போம்.

முதல் ரகசியம் :

உங்கள் பொருளாதார இழப்பு- நீங்கள் பணம் நஷ்டமாகியிருந்ததென்றல், எங்காவது
தொலைத்து அல்லது வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதனை உங்கள்
நண்பர்களிடமோ அல்லது உறவினர்களுடனோ பகிர்தல் கூடாது.

இரண்டாவது ரகசியம் :

வேறொரு மனைவியைப் பற்றி :

உங்கள் நெருங்கிய நண்பரிடமோ அல்லது மற்றவர்களுடனோ, வேறொருவரின் மனைவியின் நடத்தை அல்லது அப்பெண்ணின் குணங்களையோ குறை சொல்லக் கூடாது.

மூன்றாவது ரகசியம் :

உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் :-உங்களுக்கென தனிப்பட்ட ரகசியங்கள் அல்லது பிரச்சனைகள் இருக்கலாம். அவற்றை எக் காரணத்திலும் மற்றவர்கள் அல்லது உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே பகிர்தல் தவறு. இதனால் என்றாவது ஒரு நாள் இதன் மூலம் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

நான்காவது ரகசியம் :

தவறுகள் :-

நீங்கள் தவறுகள் செய்திருக்கலாம். அதனை திருத்திக் கொள்வது வேண்டும். அல்லது
சரிப்படுத்தவேண்டும். இதைவிடுத்து, உங்கள் தவறை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இது மற்றவர்கள் உங்கள் மீது அவ நம்பிக்கை ஏற்படுத்தவே வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here