குழந்தைகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை: மத்திய அரசு ஒப்புதல்

0
881

சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காஷ்மீர் சம்பவம் மிகப்பெரிய கொதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், இன்று அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுமிகள் மீதான பாலியல் தீண்டல்கள் குறித்து விலாவாரியாக ஆலோசனை செய்யப்பட்டது.

பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் மனித மிருகங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்கோ சட்டத்தை திருத்தவும், இந்த குற்றத்திற்கு குறைந்தபட்ச தண்டனையாக இருபது ஆண்டுகள் வரையிலும் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கவும், கூட்டு வன்புணர்வு செய்யும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது தூக்குத்தண்டனை விதிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பெண்களை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனையாக ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஆயுள் தண்டனை கிடைக்கும் வகையில் போஸ்கோ சட்டம் திருத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. கூடிய விரைவில் இச்சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here