அதிக வயது வித்தியாசத்தில் மணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள்

0
81

காதல் வயது வித்தியாசம் பார்ப்பதில்லை என்பதற்கு நிறைய உதாரண தம்பதிகள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 8 லிருந்து 10 வருட
வித்தியாசத்தில் இருப்பவர்கள் நிறய ஒற்றுமையோடும் புரிதலோடும் இருக்கிறார்கள் என்பதற்கான கட்டுரைதான் இது.

அதிக வயது வித்தியாசத்தில் மண்ம செய்து கொண்ட நடிகை நடிகர்களைப் பார்க்கலாம்.

ஹேமமாலினி-தர்மேந்திரா :

தர்மேந்திரா தன்னை விட 13 வருடம் சிறியவரான ஹேமாமாலினியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷா, அஹானா என இருமகள்கள் இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி-போனிகபூர் :

போனிகபூர் ஸ்ரீதேவியின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தன்னை விட 8 வருடம் வயதில் குறைந்த ஸ்ரீதேவியை காதல் மணம் செய்தார். இருவரும் சிறந்த தம்பதிகளாகவே இருந்தததாக அவரது மகள்கள் குறிப்பிட்டிருந்தனர்.

ரஜினிகாந்த்-லதா :

நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தன்னை விட 8 வருடம் வயதில் குறைவராக இருந்த லதாவை காதலித்து மணம் செய்து கொண்டார்.
ஒரு ரசிகையாக அறிமுகமான லதாவை 1981 ஆம் ஆண்டு ரஜினி காதல் மணம் செய்து கொண்டார்.

ரோஜா- செல்வமணி :

ரோஜா தன்னை விட வயதில் 9 வருடம் வித்தியாசம் அதிகமிருந்த செல்வமணியை பல வருடங்களாக காதலித்து பின் மணம் செய்து கொண்டார். இருவரும் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

அஜித் ஷாலினி :

அஜித் ஷாலினி தம்பதியினர் அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்குமே ஆதர்ச தம்பதிகளாக இருக்கிறார்கள். 1999ஆம் ஆண்டு அஜித் தன்னை விட 8 வயது குறைவான ஷாலினியை மிக எளிமை முறையில் மணம் செய்து கொண்டார்.

அஸின்- ராகுல் ஷர்மா :

கஜினி படத்தில் மொபைல் கம்பபெனியின் அதிபரை காதலித்தது போல் நிஜ வாழ்விலும் மைக்ரோமேக்ஸ் உப-நிறுவனர் ராஹுல் ஷர்மாவை காதலித்து மணம் செய்தார். இருவரருக்கும் 10 வருட வித்தியாசம். காதலித்தார்.

பகத் ஃபாஸில்- நஸ்ரியா :

நஸ்ரியா நன்றாக சினிமாவில் நடித்த்க் கொண்டிருக்கும்போதே தன்னை விட 13 வருடம் பெரியவரான ஃபகத் ஃபாஸிலை மணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் வீட்டில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது.

சயிஃப் அலிகான்- கரீனா கபூர் :

44 வயதான சயிஃப் அலிகான் விவாகரத்தானவர். தன்னைவிட 10 வருடம் இளையவரான கரினாவை மணம் செய்து கொண்டார்.

ஷாஹித் ஹபூர்-மீரா :

34 வயதாகும் ஷாஹித் கபூர் தன்னை விட 13 வருடம் இளையவரான மீராவை மணம் செய்து கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here