ஆம்பூரில் ஓடிய பஸ்ஸை கெத்தாக தடுத்து நிறுத்திய தேவயாணி!

0
542

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டக் குரல்கள் எழுந்திருக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக தி.மு.க.வினர் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர் ஒரே நாளில் சாலையில் களமிறங்கினர்.

பல இடங்களில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றதால் பல இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் பலவும் பணிமனையிலேயே நிறுத்தப்பட்டிருந்தது. சில மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு பேருந்திலும் போலீசார் இரண்டு பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

முழு அடைப்பு போராட்டம் நடந்தபோது, சென்னை, திருவண்ணாமலை, சேலம், தஞ்சாவூர், வேலூர், ஆம்பூர் ஆகிய இடங்களில் தி.மு.க.வினர் தீவிரமாக போராடினர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை வயதான பெண்ணான தேவயாணி என்ற 60 வயது பாட்டி, கையில் தி.மு.க. கொடியுடன் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் குவிந்த தி.மு.க.வினர் போராட்டத்தை தொடங்கியிருந்தனர். ஆம்பூர் 28வது வார்டில் வசிக்கும் நகர மகளிர் அமைப்பின் துணை செயலாளர் தேவயாணியும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திருப்பத்தூரில் இருந்து ஆம்பூர் சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து தங்க நாற்கர சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. இதைக் கண்டு கோபம் அடைந்த தேவயாணி கையில் கட்சிக் கொடியை எடுத்தார்.

நெடுஞ்சாலையில் துணிச்சலாக நடந்து சென்று, தடுக்க முயன்றார். பேருந்து ஓட்டுனர் வேகம் எடுக்க முயன்றார் என்றாலும் தைரியமாக தேவயாணி நாடு ரோட்டிலேயே நின்று விட்டார். இதனால் ஓட்டுநர் பேருந்தை எடுக்க முடியாமல் நிறுத்தியேவிட்டார்.

‘எங்களுக்கா பந்த் அறிவிச்சோம்? மக்களுக்காகதான அறிவிச்சிருக்கோம்? உங்களுக்கெல்லாம் மக்கள் மேல அக்கறையே இல்லையா?
பஸ்ஸை எடுத்தே… கண்ணாடிய ஒடச்சிடுவேன்’
என தேவயாணி பாட்டி தன் கையில் இருந்த கொடியை காட்டி மிரட்ட, பேருந்து ஓட்டுநர் பஸ்ஸில் இருந்து இறங்கிவந்து ‘இப்போ திரும்பி போயிடுறோம்’ என்று கூறிவிட்டு, பேருந்தை கிளப்பினார்.

அதன்பின் நேராக ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ள ரயில் நிலையத்திற்கு விரைந்தார் தேவயாணி. அதில் கலந்துகொண்டு போராடிய இவரை போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here