உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முந்திரியை சாப்பிடலாமா?

0
759

முந்திரியை பிடிக்காதவங்க யாருமே இருக்க முடியாது. அதுவும் வறுத்த முந்திரியை டைம் பாஸிற்காக எடுத்துக் கொண்டால் சொல்லவே வேண்டாம். எவ்ளோ உள்ளே போகுதுன்னே நமக்கு தெரியாது. அப்படி மொறுமொறுப்பான யம்மியான முந்திரியை
டயட்டில் இருப்பவர்கள் தியாகம் செய்யனுமா? வேண்டாமா என குழம்புவார்கள். உண்மையில் இதில் இருவேறு கருத்த்துக்கள் இருந்தாலும் உங்களை சரியாக வழி நடத்தத்தான் இந்த கட்டுரை.

Woman showing handful of cashews in close up

முந்திரி சாப்பிட்டால் உடல் குண்டாகுமா, இளைக்குமா என தெரிந்து கொள்வதற்கு முன் அதன் சூப்பர் பவர்களை தெரிந்து கொள்ளுங்கள்.

நல்ல கொழுப்பு :

முந்திரியில் நல்ல கொழுப்புகள் மட்டுமே உள்ளது. அதுபோல் அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகளும் இருக்கின்றது. இவை உங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

புரதம் :

முந்திரியில் மிக அதிக கொழுப்பு இருப்பதால் உங்களுக்கு நாள் முழுவதும் சக்தி தந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

Brain of baby x-ray graphic.3D rendering

விட்டமின், மினரல்கள் :

முந்திரியில் விட்டமின் சி, தையமின், பி6, ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் என நரம்பு மண்டலத்திற்குத் தேவையான மிக முக்கியமான சத்துக்களை கொண்டுள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஹார்மோன் வளர்ச்சி :

சீரற்ற ஹார்மோன் சுரப்பினால் உடல் பல உபாதைகளுக்கு உட்படுகிறது. தினமும் எடுத்துக் கொள்ளும் சிறிதளவு முந்திரி உங்கள் ஹார்மோன் சுரப்பை சீராக்குகிறது.

மன அமைதி :

முந்திரி மன நிலையை அமைதிப் படுத்துவதில் முக்கியப் பங்கு கொண்டுள்ளது. உங்கள் உணர்ச்சிகளுக்கும், கோபத்திற்கும், செரடோனின் என்ற ஹார்மோன் தான் காரணம். அதனை சீராக்கி நல்ல தூக்கத்தையும், ரிலாக்ஸான மன நிலையை தருகிறது.

கண் பார்வை :

முந்திரியில் அதிக அளவு ல்யூடின், ஜியாஜாந்தைன் இருக்கின்றது. இந்த இரண்டுமே கண் நரம்புகளை பலப்படுத்தும். அதிக ஒளியினால் உண்டாகும் கண் பாதிப்பை தடுக்கிறது. வயதான பின் வரும் கேடராக்ட் வராமல் உங்கள் கண்களை பாதுகாக்கலாம்.

உடல் எடை கூடுமா?

ஆமாம். முந்திரியில் அதிக கலோரி இருக்கின்றது. முந்திரியிலுள்ள கொழுப்பினால் உடல் எடை கூடாது. ஆனால் அதிலுள்ள அதிக கலோரியால் உடல் எடை கூடும்.

எப்படி டயட்டில் சேர்க்கக் கூடாது ?

முந்திரியை சால்ட் போட்டு வறுத்து சபபிடுவதோ, அல்லது வெறுமனே வறுத்து சாப்பிடுவதோ அதிக கலோரியை தரும். உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். ஆகவே வறுத்து சாப்பிடுவதை தவிருங்க.

எப்படி சாப்பிடலாம்?

முந்திரியை மற்ற நட்ஸ் வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது குறைந்த அளவு சாப்பிட வேண்டும். அதனை பச்சையாக சாப்பிடுவது நல்லது. அல்லது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். இந்த வகையில் சாப்பிட்டால் அதன் அற்புத சத்துக்களும் உங்களுக்கு கிடைக்கும். உடல் எடையும் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here