இனி ஆர்சி, லைசென்ஸ் எல்லாம் வேண்டாம்.. போன் இருந்தா போதும்..!

0
487

இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், மத்திய அரசு மாநிலங்களை வாகன ஓட்டிகளின் மின்னணு முறையில் ஓட்டுனர் உரிமம், ஆர்சி மற்றும் இதர ஆவணங்களை அரசின் டிஜிலாக்கர் சேவை அல்லது எம்பரிவாகன் தளத்தில் காண்பித்தால் ஏற்றுக்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது.

bike

ஏற்கனவே மத்திய அரசு இதை அமல்படுத்தியிருந்தாலும், பல மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தாமல் இருந்தது.

ஆகவே இதனை உடனடியாக நாடு முழுவதும் அமல்படுத்த சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மோட்டார் வாகன சட்டம் 1998 கீழ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல மாநிலங்களில் மின்னணு முறையிலான ஆவணங்களைப் போக்குவரத்து காவல் துறை ஏற்றுக்கொள்வதில்லை என ஆர்டிஐ மூலம் புகார் மற்றும் விளக்கத்தைக் கோரிய நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here