பட்ஜெட்டில் யார்யாருக்கு என்ன கிடைத்தது..?

0
646
நிதியமைச்சர் அருண் ஜெட்லி மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் மோடி ஆட்சியின் கடைசி இடைக்கால பட்ஜெட் அறிக்கையை இன்று பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அதிரடியான வருமான வரி தளர்வு, விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதி என்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிற துறைகளுக்கு என்ன கிடைத்துள்ளது என்பதே இப்போது பார்ப்போம்.

கிராம வளர்ச்சி

கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் திட்டமான (100 நாள் வேலை திட்டம்) MNREGA திட்டத்திற்கு இந்த வருடம் சுமார் 60,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்புகளை பெறுவது மட்டும் அல்லாமல் சம்பளமும் பெற முடியும். இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் மேன்மை அடையும்

விலங்கு மற்றும் மீன் வளர்ப்பு துறை

விலங்கு வளர்ப்பு துறையின் வளர்ச்சிக்காக 7,050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் இத்துறையில் புதிய வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட திட்டமிட்டப்பட்டுள்ளது,
பசு பாதுகாப்பு மற்றும் அதன் திறனை மேம்படுத்து ராஷ்ட்ரிய காமாதேனு திட்டத்தை துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 750 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன் பிடிப்பு மற்றும் அதன் வளர்ச்சிக்கென தனி துறையை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல் மீன் பிடிப்பு மற்ரும் விலங்கு வளர்ப்பு துறையில் இருப்பவர் வாங்கும் கடனுக்கு 2 சதவீத வட்டி தள்ளபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகா ஓய்வூதிய திட்டம்

மாத வருவாய் 15 ஆயிரம் வரை வருவாய் உள்ளோருக்கு 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3000 பென்ஷன் கிடைக்கும். இத்திட்டத்தில் பங்குபெற முதலீட்டு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இத்திட்டத்தில்
29 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் மாதம் 100 செலுத்தினால் போதும்
19 வயதில் பென்ஷன் திட்டத்தில் சேருவோர் 55 ரூபாய் செலுத்தினால் போதும்

பெண்கள்

பெண்களின் நலனுக்காக உஞ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட உள்ளது.
பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு

சிறு, குறு தொழிற்துறை

ஜிஎஸ்டி வந்த பின்பு சிறு, குறு தொழிற்துறை பெரிய அளவில் பாதித்துள்ள நிலையில், இத்துறையை ஊக்குவிக்க பெண்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களுக்கு 3 சதவீத வரி சலுகை கொடுப்பதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ராணுவம்

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வரலாற்றில் முதல் முறையாக சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் one rank one pension திட்டத்திற்காக 2019-20ஆம் நிதியாண்டிற்கு சுமார் 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

ரயில்வே

இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு சுமார் 64,587 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மோடிக்கு நன்றி.. விவசாயிகள் கொண்டாட்டம்..!

2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் சமானிய மக்களுக்கு கிடைத்த வரி சலுகையை போல் விவசாயிகளுக்கும் பெரிய அளவிலான நன்மை கிடைத்துள்ளது.

விவசாயிகள்

பிரதான் மந்திரி கிஸ்ஸான் யோஜனா திட்டத்திற்கு 2019-20ஆம் நிதியாண்டிற்கு பட்ஜெட் அறிக்கையில் சுமார் 75,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீர்த்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காக்கும் வகையில். அவர்களின் மிகப்பெரிய சுமையான பயிர்கடனில் 2 சதவவீத வட்டியை மானியமாகவும், சரியான நேரத்தில் கடனை கட்டுவதன் மூலம் 3 சதவீதம் கூடுதல் வரி சலுகையை அறிவித்துள்ளது.
அனைத்தையும் தாண்டி பிரதான் மந்திரி சாமான் நிதி திட்டத்தின் கீழ் 2 ஹெக்டர் நிலத்திற்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய் தங்களது வங்கி கணக்கிலேயே செலுத்தப்படும் என பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு

இந்தியாவையே அதிர்ச்சி அடைய வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அதன் பின் அறிவிக்கப்பட்ட கருப்பு பணம் கட்டுப்பாடு நடவடிக்கையின் மூலம் 50,000 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது, இதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக 1.3 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் 6,900 கோடி ரூபாய் பினாமி சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. வெளிநாட்டில் 1,600 கோடி ரூபாய் முறையற்ற சொத்துகள் இருப்பதும் வெளிவந்துள்ளது.
அனைத்தையும் தாண்டி இக்காலக்கட்டத்தில் 3.38 போலி நிறுவனங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here