மூக்குகண்ணாடி மூலம் கால் செய்ய முடியும்.. போஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்..!

0
283

ஆடியோ மற்றும் ஸ்பீக்கர் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான போஸ் தற்போது இரண்டு அதிநவீன ஸ்மார்ட் சன்கிளாசஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஆர்குமென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் சன்கிளாஸ் மூலமாகவே போன் செய்யும் திறன் கொண்டது.

போஸ் நிறுவனம் பிரேம்ஸ் “ஆல்டோ” மற்றும் “ரொண்டோ” என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட் சன்கிளாஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது போஸ் நிறுவனம்.

இந்த ஸ்மார்ட் சன்கிளாசஸ்களில் பில்ட் இன் 9-ஆக்சிஸ் மோஷன் சென்சார்களுடன் கூடிய வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவையுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணாடிகள் ஸ்கிராட்ச் ரெஸிஸ்டண்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டண்ட் சான்றுடன் உருவாக்கப்பட்டுள்ளதா போஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரேம்ஸ் சன்கிளாசஸ் இன் இந்திய சந்தையில் சுமார் ரூ.14,037 என்ற விலையில் விற்பனை செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here