ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி கட்டாயமாம்!! நம்ம இந்தியால இப்படி ஒரு கிராமம்!!

0
45

இந்த காலத்துல ஒர் கல்யாணம் பண்றதே குதிரைக் கொம்பா இருக்கு. இதுல ரெண்டு
கல்யாணமான்னு வாயை பிளக்காதீங்க. காரணம் அது இந்தியாலதான் இருக்குன்னு
தெரிஞ்சா உங்க காதுல புகைதான் வரும்.

ஒவ்வொரு இடத்திலும் வித்யாசமான பழக்கங்கள், நடைமுறைகள்.சட்டம் என்பது
மனிதனை ஒழுங்குப்படுத்தவே ஆரம்பித்தது. பின்னர் அவரவருக்கேற்ப சட்டங்களை
வளைத்து, நெளித்து ஈயம் பித்தளைப் போல் ஆக்கியது வேறு கதை. இருப்பினும் சில
இடங்களில் சட்டம் என்பதைப் பற்றி அறியாமல் அவரவருக்கு உண்டான கலாச்சாரங்கள், விதிமுறைகளை உண்டாக்கி வாழ்கிறார்கள். அப்படித்தான் இந்த கட்டுரையில் இவர்களைப் பார்க்கப் போகிறோம்.

இந்தியாவில் இந்த ஊரில் ஒரு ஆணிற்கு கட்டாயம் இருமனைவிகள் இருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. அந்த கிராமத்தைப் பற்றியும் அவர்களின் பழக்க வழக்கத்தைப் பற்றியும் பார்க்கலாம்.

எங்க இருக்கு அந்த ஊர் :

 

அந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டேராசார் என்ற கிராமம்தான். இந்த
கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் இருமனைவிகள்.

விசித்திர விதி :

விசித்திரமான விதி எனவென்றால், ஒருவர் தனது முதல் மனைவி மூலமாக குழந்தை
பெறக் கூடாது. இரண்டாவது மனைவியின் மூலமாகத்தான் குழந்தைகள் பெற
வேண்டுமாம். அதனால் பெயருக்கு முதல் திருமணம் செய்து, குழந்தைக்காக
இரண்டாவது மணம் செய்து கொள்கிறார்கள்.

காரணம் :

காரணம் இரண்டாவது மணம் நடந்தபின் அந்த மனைவி மூலமாக பெற்ற குழந்தைகள்
மூலமாகத்தான் அவர் உண்மையை நிலை நாட்டமுடியும் என்பது அவர்களின்
நம்பிக்கை.

விதியை மீறுபவர்கள்

சிலர் அங்கு இரண்டாவது திருமணத்தில் உடன்படாமல் முதல் மனைவியுடனே
வாழ்க்கையை நடத்துகிறார்கள். அப்படி செய்தால், அவர்கள் முதல் மனைவி மூலம்
குழந்தைப் பெறக் கூடாது என்பது அங்கிருக்கும் பெரிய மனிதர்களின் கட்டளை.
அவர்களும் அதன்படியே குழந்தை பெறாமல் முதல் மனைவியுடன் வாழ்கிறார்கள்.
அவர்களின் கலச்சாரம் பாதுகாக்க இந்த நடவடிக்கை.

இதில் இரு மனைவிகளுக்குள்ளும் போட்டி, பொறாமை, கருத்து வேறுபாடுகளில்லை.
எல்லாரும் ஒரே குடும்பமாக சேர்ந்து வாழ்கிறார்கள்.

எது எப்படியோ இதெல்லாம் என்றோ ஒரு காலத்தில் ஆண்குழந்தை பிறப்பு சதவீதம்
குறைவாக இருந்த சமயத்தில் நடந்திருக்கலாம் அல்லது பெண்களை அடிமையாக
வைத்திருக்க எண்ணி வகுத்திருக்கலாம். ஆனால் இப்பவும் அப்படியே அவற்றை
பின்பற்றுவது அறியாமையா? கலாச்சாரமா? இல்லது பெண்ணடிமைத்தனமா? உங்கள்
கருத்துக்களை பதிவிடுங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here