தெருவிற்கு வந்த பில் கேட்ஸ்.. மக்கள் அதிர்ச்சி..!

0
1603

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10 வருடங்களுக்கும் அதிகமாகக் காலத்திற்கு டாப் 5 இடத்தில் இருப்பவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி வளர்ச்சியின் காரணத்தால் சுமார் 95 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்திற்கு அதிபதியாக உள்ளார்.

இவர் தனது சொத்தின் பெரும் பகுதியை நன்கொடையாகக் கொடுத்துவிட்ட நிலையில், பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார். ஆயினும் இன்று வரை முதல் 5 இடத்தில் பில் கேட்ஸ் இருக்கிறார்.

இப்படிப்பட்ட பில் கேட்ஸ் அமெரிக்காவில் உள்ள தெருக் கடை அதாவது டிரைவ் இன் சீப் ஹோட்டலுக்கு வந்து உணவை பெற்றுள்ளார். அதுவும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தன்னுடை உணவை தானே பெற்றுக்கொண்டுள்ளார்.

சியாட்டில் பகுதியில் உள்ள டிக்’ஸ் டிரைவ் இன் என்னும் உணவகத்தில் சாதாரணச் சிவப்பு ஸ்வெட்டர், சாம்பல் நிற பேன்ட், கருப்பு ஷூ அணிந்துகொண்டு எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உணவை வாங்கியுள்ளார் பில்கேட்ஸ். இதைப் பார்த்த இங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டும் அல்லாமல் மெய்சிலிர்த்து போய் நின்றதாகக் கூறப்படுகிறது.

பில் கேட்ஸை கடையில் பார்த்த முன்னாள் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இந்தக் காட்சியை அப்படியே போட்டோ பிடித்துப் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் உலகம் முழுவதும் டிரெண்டாகியுள்ளது.

இந்த உணவகத்தில் பில் கேட்ஸ் வாங்கிய உணவின் மதிப்பு வெறும் 7.68 டாலர் மட்டுமே. ஒரு பெரிய பர்கர் 3.40 டாலர், பிரென்ச் ப்ரைஸ் 1.90 டாலர், பெரிய கோகோ கோலா 2.38 டாலர் ஆகியவற்றை வாங்கியுள்ளார் பில் கேட்ஸ்.

எவ்வளவு பெரிய பணக்காரர் ஆக இருந்தாலும் சரி அடக்கமாக இருக்க வேண்டும் என்று இந்த ஒரு போட்டாவில் காட்டியுள்ளார் பில் கேட்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here