சமானியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அரசின் அதிரடி அறிவிப்புகள்..

0
1083
இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அறிக்கை பொதுத் தேர்தலை மனத்தில் வைத்துக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிது, பட்ஜெட்டை தாக்கல் செய்த பியூஷ் கோயல் சமானியர்களைக் கவரும் வருமான வரி குறித்த அறிவிப்புகளைக் கடைசியில் தான் அறிவித்தார்.
இன்று வெளியிட்ட அறிவிப்புகளில் சமானிய மக்கள் மத்தியில் பெரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன அறிவுப்புகள்ன்னு தானே கேட்குறீங்க வாங்க பார்ப்போம்.
1. 2.5 லட்சம் ரூபாய் வரையில் இருந்து வருமான வரி விலக்குத் தற்போது 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
2. standard deduction-க்கு முன்பு அளிக்கப்பட்ட 40000 ரூபாய் தற்போது 50000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
3. முன்பு அளிக்கப்பட்ட அடிப்படை வரி விலக்க திட்டங்கள் அதாவது Basic exemption மூலம் 1.5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு வருமான வரி விலக்குப் பெறலாம்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரி விலக்குப் பெறலாம்.
இது மட்டும் அல்லாமல் வங்கி வைப்பு நிதியில் பெறும் வட்டி வருமானத்திற்கான வரி விலக்கு 10000 ரூபாயில் 40000 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் 2 வீடு வைத்துள்ளவர்கள் 2வது வீட்டின் மூலம் வருமானம் பெற்றாலும் சரி பெறாவிட்டாலும் சரி வருமான வரிச் செலுத்தியாக வேண்டும். ஆனால் இன்றைய அறிவிப்பின் மூலம் இதற்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கான வரி விலக்கு 1.8 லட்சம் மூலம் 2.4 லட்சம் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் கிட்டத்தட்ட 7,30,000 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழுமையான வருமான வரி விலக்கு பெற முடியும்.
இந்த அதிரடியான அறிவிப்புகள் மூலம்  பொது தேர்தலில் மோடி அரசு சமானிய மக்களின் வாக்குகளை பெற முடியும், இதன் மூலம் அடுத்த 5 வருட ஆட்சியை பிடிக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here