புதிய ஐபோன் விலை 1 லட்ச ரூபாயாம்.. அப்படி இதுல என்னதான் இருக்கு..?

0
8678

உலகின் முன்னணி டெக்னாலஜி மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்த வருடம் எப்போதும் இல்லாத வகையில் 3 மாடல் போன்களை வெளியிட்டு அசத்தியுள்ளது.

பொதுவாக ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை விரும்பாதவர்கள் யாருமே இல்லை, ஆனால் இதன் விலையைக் கேட்டால் தான் அனைவருக்கும் வெறுப்பு. இந்தியா போன்ற நடுத்தர மக்கள் அதிகமாக இருக்கும் நாட்டில் ஒரு ஸ்மார்ட்போன் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும் என்று அதிகமானோர் முன்வரமாட்டார்கள்.

இதைப் புரிந்துகொண்டு தான் சியோமி, விவோ போன்ற நிறுவனங்கள் குறைந்த விலையில் சிறப்பான போன்களை அறிமுகம் செய்து ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களைக் கலங்கடித்தது.

இந்நிலையில் தொடர்ந்து தனது தரத்திலும் வாடிக்கையாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்த ஆப்பிள் நிறுவனம் எக்ஸ் சீரியஸ் பெயரில் 3 புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 1,05,000 ரூபாய்.

1 லட்சம் ரூபாய் கொடுக்கும் அளவிற்குப் புதிய போனில் அப்படி என்னதான் இருக்கு..? வாங்க பார்ப்போம்.

ஐபோன் எக்ஸ்

ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே ஐபோன் எக்ஸ் என்கிற ஐபோன் 10 போனை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தப் போனின் மேம்பட்ட வடிவமாக ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் XR என்ற மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

டூயல் சிம்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனம் அனைத்தும் தங்களது மொபைலில் டூயல் சிம் சேவை அளித்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் இதை ஏற்காமல் தொடர்ந்து ஐபோனில் ஓற்றைச் சிம் சேவை மட்டுமே வழங்கி வந்தது. டூயல் சிம் சேவை கொண்டு வருவதற்கு இந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தடையாக இருந்தார்.

இதைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்த ஆப்பிள் நிறுவனம் தற்போது போட்டியின் காரணமாகப் புதிய ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் XR மாடல்களில் டூயல் சிம் சேவை வழங்கத் துவங்கியுள்ளது.

இந்த டூயல் சிம் சேவையில் ஒரு சிறிய மாற்றம், இது eSim ஆக இருக்கும். இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் eSim அளிக்கிறது.

பெரிய ஸ்கிரீன்

இதுவரை ஐபோனில் இல்லாத வகையில் 6.5 இன்ச் அளவு கொண்ட OLED ஸ்கிரீன் ஐபோன் Xs மாடலில் கொண்டு வரப்பட்டுள்ளது.

IP68 ரேட்டிங்

இப்பதிய ஐபோன் மாடல்களில் இரண்டு போன்கள் தண்ணீர் மற்றும் தூசு பாதுகாப்புத் தரத்தை பெற்றுள்ளது. இதற்காக IP68 ரேட்டிங்-ஐ ஐபோன் பெற்றுள்ளது.

மேலும் புதிய ஐபோன் 2 மீட்டர் ஆலத்தில் 30 நிமிடம் வரையில் தாங்கும் சக்தி உள்ளது.

பேஸ் ஐடி

ஐபோன் எக்ஸ்-இல் மட்டும் இருந்த பேஸ் ஐடி தற்போது மூன்று ஐபோன் மாடல்களிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் HDR

ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் XR மாடல்களில் புதிதாக ஸ்மார்ட் HDR என்ற

ஸ்டீரியோ ஆடியோ

மேம்படுத்தப்பட்ட ஸ்டீரியோ ஆடியோ புதிய ஐபோன்களில் வழங்கப்படுகிறது.

A12 பயோனிக் பிராசசர்

ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் XR போன்களில் தற்போது புதிதாக மேம்படுத்தப்பட்ட A12 பயோனிக் பிராசசர் வைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட்போன் இயக்கம் மிகவும் வேகமாக இருக்கும்.

512ஜிபி ஸ்டோரேஜ்

முதல் முறையாக ஸ்மார்ட்போனில் ஐபோன் Xs, ஐபோன் Xs Max போன்களில் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு வெளியிட உள்ளது ஆப்பிள்.

இதற்கு முன்பு ஆப்பிள் வெளியிட்ட ஐபோன்களில் அதிகப்படியான சேமிப்பு அளவு 256ஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here