பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டாத ஓவியாவின் இன்னொரு முகம்

0
532

நடிகை ஓவியாவை விட பிக்பாஸ் ஓவியா என்றால் தான் அனைவருக்கும் பிடிக்கும்.  பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழ் ரசிகர்களை தான் பக்கம் கவர்ந்த ஓவியா. அந்த நிகழ்ச்சி 100 நாள் முடிவடைந்தும், இன்னும் அவரின் அலைகள் ஓய்ந்ததில்லை. ஓவியாவின் செயல் மக்களுக்கு பிடித்துபோக ஒவ்வொரு முறையும் மக்களால் ஓட்டுப் போட்டு வீட்டில் இருக்க வைத்தனர். ஜூலி வலியால் அழுது கொண்டியிருந்த போது ஓவியா தான் ஆறுதல் சொல்லுவார். ஆனால் ஜூலி ஓவியாவை கேட்டவள் என்று கூறிஇருப்பார்.  தனிமையில் இருந்த ஓவியவிற்கு அராவ் ஆறுதல் சொல்லவே பிறகு அராவ் மீது காதல் உண்டானது. ஆனால் அராவ் நான் நட்பாக தான் பழகினேன் என்று சொல்ல மனமுடைந்து போனார். பின் ஓவியா ஆரவ காதல் பிரிந்து போக தற்கொலை முயற்சியும் மேற்கொண்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். பின் தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு ரசிகர்களால் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் வர வேண்டும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சியின் இறுதி நாளே வந்தார். அதுமட்டுமில்லாமல் கமலின் பேச்சும் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பையும் பெற்று தந்தது எனலாம். இதில் நிகழ்ச்சியை மட்டும் தொகுத்து வழங்காமல் தனது அரசியல் சிந்தனைகளுக்கும் பயன்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் முதலில் குறைந்த ஓட்டுகளை வாங்கி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர் நடிகை அனுயா. இவர் தமிழில் ஒரு சில படங்களை மட்டுமே நடித்தார், குறிப்பாக சிவா மனசுல சக்தி, நண்பன் படங்கள் மூலமே இவர் பிரபலமானார். படவாய்ப்புகள் இவரை குறைவாகவே தேடிவந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஓவியாவை பற்றி கூறியிருப்பார். பிக்பாஸ் வீட்டில் தான் யாரிடமும் சண்டை போடவும் இல்லை, வெறுப்பையும் காட்டியதும் இல்லை. எனக்கு தோழியாக ஓவியா தான் இருந்தார். இரவு விளக்கு அணைத்ததும் தனியாக பாடிக்கொண்டிருப்பேன், அதை பார்த்த ஓவியாவிற்கும் தன்னை பிடித்தது. அதன் பிறகு ஓவியா தன்னை படச்சொல்லி அடிக்கடி கேப்பார்,  அதை எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பவே இல்லை என கூறியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here