திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்தது ஏன்

0
557

திடீரென கடந்த வரம் முழுதும் பாக்யராஜ் ஹீரோவாக வலம் வந்தார். காரணம் சர்க்கார் பாடத்தில் உண்டான சர்ச்சை.

சர்க்கார் படத்தின் கதையைக் கேட்ட உதவி இயக்குனர் வருண் அதிர்ச்சி அடைந்து திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜிடம் முறையிட்டார். அவரும் இக்கதையை ஆராய்ந்து, இரண்டு கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து சங்கத்தில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களூடன் கலந்து ஆலோசித்து அதன் பின் இப்புகாரை பரிசீலித்தார்.

சர்க்கார் தரப்பிடமிருந்து நியாயமான எந்த பதிலும் வராததால், அவர் சட்டப்படி சென்று வருணுக்கு தர வேண்டிய நியாயமான தீர்ப்பினை பெற்றுத் தந்தார். இதனால் கடந்த வாரம் முழுவதும் பாக்கியராஜின் நேர்மையான அக்குணமே பேசப்பட்டது.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம், மிகப்பரிய நடிகர், மற்றும் மிகப்பெரிய டைரக்டர் ஆகியோரை பகைத்துக் கொண்டு நியாயத்தின் பக்கம் இருந்த பாக்ய ராஜ் திடீரென எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிய ராஜினாமா செய்தார்.
அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.

இதன் தொடர்பாக பல முறை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிடம் கேட்ட போது, அவர் மறுப்பு சொன்னதால், வேறு வழி இல்லாமல்தான் நான் அந்த கதையையும் இந்த கதையையும் ஒப்பிட்டு கதையை வெளியில் சொல்ல வேண்டியதாகி இருந்தது. மேலும் பல முறை கெஞ்சியும் கேட்டு சர்க்கர் தரப்பிலிருந்து முருகதாஸ் உடன்படாததால், நான் சட்டப்படி வழக்கு போட கோர்ட்டை சந்தித்தேன்.
இந்த வழக்கில் வெற்றியும் வாங்கி கொடுத்தேன்.

இந்த எழுத்தாளர் திரைப்பட சங்கத்தின் தலைவராக தேர்தல் இல்லாமல், போட்டியும் இல்லாமல் நான் தேர்வானேன். நானும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு, என் பொறுப்பை உணர்ந்து நேர்மையாக செயல்பட்டேன். இப்போது சர்க்கார் பட பிரச்சனையால் நன பல அசௌகரியங்களை சந்திக்க நேர்ந்தது.

இதற்கு நேரடியாக நான் தேர்தலின்றி நான் தலைவர் பதவியால் வெற்றி பெற்றதால்தன இவ்ளோ பிரச்சனை. அதனால் நான் முறையாக தேர்தலில் நின்று மெஜாரிட்டியோடு வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றுக் கொண்டு கடமையோடு செயல்படுவேன்” .
இவ்வாறு பாக்யராஜ் ராஜினாமா பண்ணுவதன் காரணத்தை கூறி, ராஜினாமா செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here