கல்யாணத்திற்கு முன்னாடி பேச்சுலர்ஸ் கட்டாயம் பாக்க வேண்டிய இடங்கள் எவை?

0
3802

பேச்சுலர்ஸ் கொண்டாட்டம் என்னைக்குமே தீபாவளிக்கு வெடிக்கிற பட்டாசு மாதிரி கோலாகலமாகத்தான் இருக்கும். வீக் எண்ட் பார்ட்டி, பைக் ரைடிங்க் என ஊருக்குள்ளேயே சிலர் முடிச்சுவதுண்டு. ஆனால் கல்யாணத்திற்கு முன்னாடி இருக்கிற சுதந்திரம் பின்னாடி இருக்காத்துங்கறது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.

ஆண்கள் கூடுதலா பொறுப்பை சுமக்க வேண்டியதும் இருக்கும். இனி வர்ற காலத்த்ல குடும்பத்திற்காகவே உழைக்கப்போறீங்க. அதனால் பேச்சுலரா இருக்கும்போதே சில இடங்களுக்கு ஜாலியா ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க.

பாண்டிச்சேரி :

பேச்சுலர்கான இடம்ன்னு சொன்னதும் முதல்ல பாண்டிச்சேரியை சொல்லலைனா எப்படி?கல்யாணத்திற்கு முன்னாடி பாண்டிச்சேரி போகலைன்னா அது ஆண்களுக்கு சாபக்கேடாகத்தான் நினைப்பார்கள்.

கடற்கரை, இசை, டேன்ஸ், டிரிங்ஸ் என கொண்டாட்டங்கள் என்றுமே அங்கே பேச்சுலர்ஸ் ஆராவாரம் கேட்காம இருக்காது.

அதுவும் உங்களோட மிக நெருக்கமான பெஸ்டிக்களுடம் சேர்ந்து பாண்டிச்சேரி போவதிய விட ஒரு சந்தோஷம் உங்களுக்கு கல்யாணம் ஆனாலும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே லாக் ஆகிறதுக்கு முன்னாடி இங்கேயும் ஒரு ட்ரிப் போயிட்டு வாங்க.

பெங்களூர் :

பேச்சுலர்க்கான சிறந்த இடங்களில் ப்ன்று பெங்களூர். வார இறுதியில் எம்.ஜி.ரோட்டில் கோலாகலமாக இருக்கும். நிறைய நைட் கிளப்புகள் இருக்கின்றன. விதவிதமான வித்தியாசமான உணவுகள் சாலைகளிலேயே கிடியக்கும். ஃபுட் கோர்ட் எனப்படும், இடம், ஜெய நகர், கோரமங்கலா, எம்.ஜி ரோடு போன்றவைகள் கொண்டாட மிகச் சிறந்த இடங்கள்.

லட்சத் தீவு :

சுத்தமான வெள்ளை மணல் கடற்கரைகள், சக்குபா டைவிங் செய்யவும், சினார்கிளிங் செய்ய ஏதுவான கடல் பகுதிகளையும் கொண்டிருக்கும் லட்சத்தீவில் வேறெங்கும் இல்லாத இயற்கையின் பேரழகை எந்த தொந்தரவுமின்றி ரசிக்கலாம். லட்சத்தீவுகளில் தெள்ளத்தளிவான நீல நிறக்கடலில் இருக்கும் ஹோட்டல்களில் தங்குவதும் மிகப்புதுமையானதாகவும் புத்துனர்வூட்டுவதாகவும் அமையும். நண்பர்களுடன் ஜாலியான இரவு பார்ட்டிக்கு இதவிட பெஸ்ட் இடம் இருக்காது.

கோவா :

கோவாவில் ஆண்டுதோறும் கடற்கரையில் நடக்கும் இந்த சன்பர்ன் பார்டி மிகவும் பிரசித்து பெற்றது. அங்கு நடக்கும் கொண்டாட்டத்தில் உலகின் சிறந்த இசைக் கலைஞர்கள் பங்கேற்பார்கள். விடிய விடிய நடக்கும் இந்த பார்ட்டி உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். டிசம்பர் இறுதியில் இந்த விழா நடக்கும். அவசியம் மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க.

அந்தமான் :

ஸ்கூபா டைவிங் கடலுக்கு அடியில் மூழ்கி ஒரு சிறந்த புது அனுபவமா இருக்கும். அப்படியொரு அனுபவம் உங்களுக்கு வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டியது அந்தமான் தீவுகளுக்கு தான். அந்தமான்- நிகோபார் தீவுகளில் இருக்கும் மிக அழகான இடம் என்றால் அது ஹாவ்லாக் தீவு தான். வெள்ளை மணல் கடற்கரையும், அன்பானவருடன் இயற்க்கை ரசிக்க அமைதியான சூழலையும் கொண்டுள்ள இங்கு ஸ்குபா டைவிங் விளையாட்டும் பிரபலமடைந்து வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here