சனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்!

0
1207

சனிக் கிழமை வரும் பிரதோஷமும் மிகவும் புண்ணியமான தினமாக கருதப்படுகிறது. காரணம் சிவன் அன்றுதான் திருப் பாற் கடலில் கடைந்த அமிர்தத்துடன் வந்த விஷத்தை அருந்திய தினம். தேவர்களும், அசுரர்களும் திருப் பாற்கடலைக் கடைந்தபோது லட்சுமி, ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி என ஒவ்வொருவாக வெளிப்பட்டார்கள்.

மகா லட்சுமியை பெருமாள் ஏற்றுக் கொண்டார், மற்றவைகளை இந்திரன் முதற்கொண்டு மற்ற தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அப்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தி எவரும் ஏற்றுக் கொள்ள தயங்கினர். கொடிய விஷத்தைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் நடுங்கினார்கள்.

 

அப்போது பூமியில் ஜனித்த உயிர்களைக் காப்பாற்ற சிவன் ஆலகால விஷத்தை உண்டார். அந்த தினம் சனிக்கிழமை வந்த தினம் என்றதால் அத்தினத்தை மஹா பிரதோஷம் என்று அழைக்கிறோம். ஆகவே மற்ற பிரதோஷ நாட்களை விட சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. சனி மஹாப் பிரதோஷம் என்று அழைப்படுகிறது.

சனிப் பிரதோஷம் அன்று சிவன் கோவிலுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் அடுத்தடுத்த வந்த துன்பங்கள் மறையும். அன்று விரதம் இருந்து சிவனை வழிப்பட்டு வந்தால் அஷ்டமச் சனி மற்றும் ஏழரைச் சனி விலகும்.ஒரு முறை சனிப் பிரதோஷம் சென்று அந்தால் பல வருடங்கள் சிவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

பிரதோஷம் என்று என்ன செய்ய வேண்டும்?

அந்த நாட்களில் காலையிலேயே தலைக்கு குளித்து அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். அன்று முழுவதும் உணவு உண்ணாமல் விரதம் மேற்கொண்டு சிவபராயாணம், புராணம் படிக்கலாம் .
இப்படி செய்வதால் மோசமான தசை நடந்தால் கூட உங்கள் தீமைகள் எல்லாம் விலகி விடும். ஒரு சனிப் பிரதோஷம் சென்று வந்தால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்குமாம்.

சனிப் பிரதோஷம் மட்டுமல்லாமல் மற்ற நாட்களில் வரும் பிரதோஷ பலன்களை பார்க்கலாம் :

ஞாயிறு பிரதோஷம் :

ஞாயிறு பிரதோஷத்தில் சிவன் கோவில் சென்று வந்தால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். சூரிய திசையினால் ஏற்பட்ட துன்பம் விலகும்.

திங்கள் பிரதோஷம் :

சந்திர திசை நடப்பவர்கள் திங்களன்று வரும் பிரதோஷத்திற்கு செல்லலாம். மன வலிமை கிடைக்கும்.

செவ்வாய் பிரதோஷம் :

செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்தில் சிவனை வணங்குவதால் செவ்வாயினால் ஏற்படும் கெடு பலன் நீங்கும். கடன் தொல்லை நீங்கும்.

புதன் பிரதோஷம் :

கல்வி அறிவு வளரும். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம் :

குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கு ஏற்ப அன்று வணங்கினால் கிரக  தோஷத்தினால் வரும் கெடுதல்கள் குறையும்.

வெள்ளி பிரதோஷம் :

வெள்ளியன்று வரும் பிரதோஷத்தில் வழிப்பட்டால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

சனி மஹாப் பிரதோஷம் :

கிரக தோஷங்களால் உண்டான தீமைகள் குறையும்.  சிவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.. பாவங்கள் நீங்கும். எந்த மோசமான திசை உங்களுக்கு நடந்தாலும் அதனால் உண்டாகும் பாதிப்புகள் விலகி, நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக ஏழரை மற்றும் அஷ்டமச் சனி நடப்பவர்கள் கண்டிப்பாக சனிப் பிரதோஷத்திற்கு சென்று சிவனை வணங்கினால் சனியின் பாதிப்புகள் குறையும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here