இந்திர யோகம் தரும் அசுவமேத யாகம் செஞ்ச பலன் கிடைக்கனுமா? இந்த கோவில்ல அபிஷேகம் செய்ங்க!

0
2127

அந்த காலத்தில் கட்டப்பட்ட ஒவ்வொரு கோவிலும் ஒரு பொக்கிஷம். அவற்றிலுள்ள கல்வெட்டுக்கள் மற்றும் ஐம் பொன் சிலைகள், கலசங்கள் எல்லாம் பல மடங்கு நுண் அதிர்வலைகளை உண்டாக்கும். அதனால்தான் மிகப் பழமை வாய்ந்த கோவில்களுக்கு செல்லும் போது, நமக்கு ஒரு பாஸிடிவான அதிர்வலை உண்டாகிறது.

சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என்று சொல்லலாம். இசை, நடனம், கட்டிடக் கலை, சிற்பக்கலை என கலை, பண்பாடுகளை கொண்டாடிய காலம். இன்றும் அகழ்வாராய்ச்சி செய்கையில் சோழரின் பண்பாடுகளையும் கலை சிறப்பம்சத்தையும் வெளிப்படுத்தும் வகையில் பல சிற்பங்கள் சிலைகள் கிடைத்திருக்கின்றன.

அப்படி மிகப் பழமை வாய்ந்த ஒரு கோவில் விழுப்புரம் அருகே அமைந்துள்ளது. அந்த கோவில் சிறப்பம்சமும், அங்கு சென்று வணங்குவதால் உண்டாகும் பலன்களையும் இங்கு காணலாம்.

விழுப்புரம் அருகே உள்ள எசாலம் என்ற ஊரில் கி.பி 1032 ஆம் ஆண்டு ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்தான் ராம நாத ஈஸ்வரன் கோவில்.

இந்த கோவில் கூரை வட்ட வடிவில் அமியந்துள்ளது. . கருவறையில் விளக்கின் ஒளியில் காட்சியளிக்கிறார் ராம நாத ஈஸ்வரர். அங்கு நின்று வணங்கும் போதே நமக்கு ஒருவித அதிர்வலை உண்டாகிறது.

அபிஷேகம் செய்தால் கிடைக்கும் பலன் :

இந்த கோவிலில், பசுவின் பால் மற்றும் வெண்ணையால் சிவ பெருமானுக்கு அபிஷெகம் செய்தால் குறிப்பாக பிரதோஷ நாட்களில் செய்தால், , இந்திர யோகத்தை அள்ளித் தரும் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்குமாம்.

பசு நெய் வைத்து அபிசேஷம் செய்பவர்களுக்கு அக்னி ஹோமம் செய்வதல கிடைக்கும் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

பல நிறப் பூக்களால் அர்ச்சனைகள் செய்யும் போது 100 பசுக்களை கோதானம் செய்த பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ நாட்களில் வந்து கடவுளை வணங்குபவர்களுக்கு, துன்பங்கள் நீங்கியும், திருமண யோகம் இல்லாதவர்களுக்கு திருமண யோகமும் கிடைக்கும் என்று சொல்கிரார்கள்.

கால் நடைகளுக்கு :

கால் நடைகளுக்காக வணங்க இருக்கும் ஒரே கோவில் இந்த கோவில்தன என்று சொல்கிறார்கள். வீட்டில் வளர்க்கும் கால் நடைகளுக்கு நோய் உண்டானால் அதனை குணமாக்க இந்த கோவிலுக்கு வந்து வணங்கலம.

கோவில் வெளிப்புறத்தில் ஒரு சிலை உள்ளது. அது கல்ராயன் சிலை என்று அழைக்கப்படுகிறது.. அந்த சிலைக்கு கோவிலில் இருக்கும் நீரால் அபிஷெகம் செய்தால், கால் நடைகளுக்கு பீடித்திருக்கும் நோய் குணமாகும் என்று சொல்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here