தினமும் இப்படி செம்புப் பாத்திரத்தில் நீர் குடித்தால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும்?

0
67

ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் குடிப்பதை ஃபேஷனாக வைத்திருப்பவர்களுக்கு செம்பு பாத்திரத்தில் ஊற்றிய நீரின் அருமைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை.

பொதுவாகவே பாத்திரங்களுக்கும் ஒரு தன்மை என்பது உண்டு. அவற்றில் போட்டு வைத்திருக்கும் உணவு அல்லது நீர் அவ்ற்றோடு வினைபுரிகிறது. உதாரணத்திற்கு இரும்புப் பாத்திரத்தில் சமைத்தால், இரும்புச் சத்து உடலுக்கு சேர்கிறது.

மண்பாத்திரத்தில் நீர் அல்லது உணவு வைக்கும்போது தேவைப்படும் மினரல் சத்துக்கள் உடலில் சேர்கின்றது. ஈயச் சொம்பிற்கும் ஒரு சுவை.

இப்படி பாத்திரங்கள் நமது உணவோடு வினைபுரிவது தெரிந்த பின் , ரசாயனம் கலந்த நான்- ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டால் உண்டாகும் விளைவுகளைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

புற்று நோய், இரைப்பை நோய்கள், போன்றவை இந்த நான்-ஸ்டிக் பாத்திரங்கள் மற்றும் ரசாயனம் கலந்து பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் உண்டாகும்.

ஆனால் அந்த காலத்தில் பாத்திரங்கள், அண்டாக்கள், சொம்பு, தம்ளர் என எல்லாம் செம்பினால் ஆனவைகள்தான். செம்பு மிக அற்புதமான சுவையை நீருக்கு தர வல்லது. குளிர்ச்சியை உண்டாக்கும். அதோடு மட்டுமல்ல. செம்பினால் செய்த பாத்திரத்தில் நீர்
குடிப்பதால் பல அற்புதங்கள் உங்கள் உடலில் நடக்கும் என்பதை நம்புவீர்களா? அதனைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

இரவில் செம்பினால் ஆன சொம்பில் நீர் ஊற்றி மூடி வைத்து மறு நாள் அந்த நீரைக் குடித்தால் மிக அருமையான பலன்கள் கிடைக்கும்.

8 மணி நேரம் செம்பு பாத்திரத்தில் நீர் இருக்கும்போது செம்புடன் நீர் வினைப் புரிந்து நல்ல விளைவுகளை நமக்குத் தருகிறது. என்னென்ன நன்மைகள் எனப் பார்க்கலாம்.

நீரில் உள்ள கிருமிகள் :

செம்பு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை குறிப்பாக டயாரியாவிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. இதனால் நீரினால் உண்டாகும் நோய்களை நாம் தடுக்கலாம்.

ஜீரண சக்தி :

செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்போது அது ஜீரண சக்தியை மேம்படுகிறது. குடலில் ஏற்படும் தொற்று மற்றும் அதனால் உண்டாகும் வீக்கத்தை குணப்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை கட்டுபடுத்தி ,அசிசிடியைத் தடுக்கிறது.

சிறு நீரகம் :

செம்பு நீர், கல்லீரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. இதனால் நச்சுக்கள் அழிந்து ரத்தம் சுத்தமாகிறது

ஆன்டி ஆக்ஸிடென்ட் :

செம்பு பாத்திரங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. அவை உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகள்ஸை அழித்து , முதுமை அடைவதை தடுத்து இளமையை நீட்டிக்கச் செய்கிறது.

அறிவு பெருகிறது :

உடலில் சத்துக்களை ரத்தத்தில் உறிஞ்சிக்கொள்ள உதவிபுரிகிறது. மூளையின் செயல்திறனை தூண்டுகிறது. புத்தியின் வேகம் கூடி ,
அறிவாற்றல் பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here