சனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன தெரியுமா?

0
5574

நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருஅரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்..

அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம்.
மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரவும்.

 

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்திவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, அவர்களும் சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

புராணக் கதை :

திருப்பதியில் பெருமாள் அவதரித்த போது, அந்த ஊருக்கு அருகே இருந்த கிராமத்தில், ஒரு மண்பாண்டத் தொழிலாளி வசித்தார். இவர், சீனிவாசனின் தீவிர பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக வேண்டிக் கொண்டார். மேலும் அவரின் ஏழ்மை நிலையில் இருந்து விடுஓட்டு செல்வந்தராக மாற வேண்டும் என்பதே அந்த மண் பாண்டம் செய்யும் குயவரின் விருப்பம். அதற்காக திருப்பதி மலையிலுள்ள ஸ்ரீ நிவாசனை வேண்டிக் கொண்டார். மண் பாண்டம் செய்த பின் தன்னுடைய மீதியிருக்கும் மண்ணினால் பூக்கள் செய்து அதனைக் கொண்டு பகவான் ஸ்ரீ நிவாசனை அர்ச்சிப்பார்

திருப்பதி திருமலையை தொண்டைமான் எனும் அரசன் ஆட்ச்சி செய்து கொண்டிருந்தான்.. அவன் ஒருநாள் ஏழுமலையான் சன்னிதிக்குச் சென்றான். பெருமாளுக்கு அர்ச்சிக்க தங்கப் பூகளை கோவிலில் அளித்திருந்தார். அந்த பூக்களால் அர்ச்சனை செய்யும்போது அவை மண் பூக்களாக மாறியதைக் கண்டு வியப்படைந்தான். எப்படி இவ்வாறு நடக்கிறது என தெரிந்து கொள்ள காவலர்களை நியமித்து, அர்ச்சகர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டான்.

மறுநாள் அவன் சன்னிதிக்கு வந்த போதும் அர்ச்ச்சிக்கப்பட்ட தங்கப் பூக்கள், மண்பூக்களாக பெருமாளின் திருவடியில் கிடந்தன. குழம்பிப் போன அவனது கனவில், சீனிவாசன் தோன்றினார். ” ஒரு குயவன் மிகுந்த பக்தியுடன் தன்னுடைய மண் பூக்களால் எனக்கு அர்ச்சனை செய்வதால்தான் உன்னுடைய பூக்களும் மண் பூக்களாக மாறு கின்றது என ” கூறினர.

இதனல ஆச்சரியமடைந்த அரசன் அந்த குயவவை தேடி போனார் அப்போது அவர், பெருமாளின் மண்சிலைக்கு மண் பூக்களைத் தூவிக் கொண்டிருந்தார். “எதற்காக மண் பூக்களால் அர்ச்சிக்கிறாய்? எனக் கேட்டார் தொண்டைமான் அரசன்.

“அரசே நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவன்.என்னால் தோட்டத்தில் பண்ம கொடுத்து பூக்களிய வாங்க இயல வில்லிய. அகவே என்னல முடிந்த மண்ணினால் பூக்கள் செய்து அதனைக் கொண்டு சிரத்தையுடன் பெருமாளுக்கு பூஜிக்கிறேன். தவறு இருந்தால் மன்னிக்கவும்” என்று கூறினார்.

இதைக் கேட்ட தொண்டைமான் மனம் நெகிழ்ந்து, அந்த ஏழைக் குயவனுக்கு வேண்டுமளவு பணம் கொடுத்தான். ஒரே நாளில் செல்வந்தனாகி விட்டார் அந்தக் குயவர். நிஜ பக்திக்கு உரிய பலனை பெருமாள் கொடுத்து விட்டார். அவர் தனது நீண்ட ஆயுள் காலம் இருந்த வரை தொடர்ந்து பெருமாளுக்கு பூஜை செய்து, அவரது திருவடியை அடைந்தார்.

இதனால் தான், இப்போதும் திருப்பதியில், பணக்காரப் பெருமாளுக்கு, மண்சட்டியில் நிவேதனம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here