ஒரு பிச்சைக்காரருக்கு அடித்த அதிஷ்டம்!

0
269

நாம் பிறருக்கு சிறு கடன் உதவி செய்வதற்கே முன் பல முறை யோசிப்போம். ஏன் சொல்ல போனால் உதவி செய்யாமல் விட்டுவிடுவோம். அப்படி சுயநலமாக மாறியுள்ள இந்த உலகத்தில் தான் வைத்திரந்த மொத்த பணத்தையும் வேறுவொருவருக்கு உதவியதில் தற்போது பல கோடிகளுக்கு சொந்தகாரராக மாறியுள்ளார். அமெரிக்காவில் நியூ ஜெர்சி என்னும் இடத்தில் வாழ்ந்து வரும் பெண் மெக்ல்யூர். இவர் ஒரு நாள் இரவில் காரில் பயணித்து கொண்டியிருக்கும் போது பாதியிலேயே நின்று விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் தவித்து கொண்டியிருந்த மெக்ல்யூர், பிறகு காரில் பெட்ரோல் இல்லாதது தான் கார் நின்று போனதுக்கு காரணம் என அறிந்து கொண்டார்.

பரிதவித்த மெக்ல்யூர்

மெக்ல்யூர்க்கு அந்த நடுவழியில் என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்த நெடுஞ்சாலையில் உதவி என்று அழைக்கவும் யாருமில்லை. அங்கிருந்து எத்தனை தொலைவில் பெட்ரோல் பங் இருக்கிறது என்றும் தெரியாது. அவரது கையிலும் பணம் இல்லை எப்படி வீட்டிற்கு செல்வேன் என்று பரிதவித்த மெக்ல்யூர், மிகுந்த பயத்துடன் இருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த பிச்சைகாரர் ஒருவர் விசாரித்தார். பிறகு காரிலே லாக் பண்ணி பத்திரமாக இரு என்று எங்கோ சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் வந்தார். தான் வைத்திருந்த 20 டாலரையும் கொடுத்து பெட்ரோலை வாங்கி வந்துகொடுத்துள்ளார். அதன் பிறகு மெக்ல்யூர் வீடு வந்து சேர்ந்தார். ஆபத்தில் உதவிய அந்த நபருக்கு எதாவது கைமாறு செய்ய வேண்டும் என்று யோசித்து கொண்டியிருந்தார்.

ஜானி

மெக்ல்யூர்க்கு உதவிய அந்த நபர் பெயர் ஜானி. அவர் முன்னாளில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார். என்ன நடந்தது என தெரியவில்லை அவர் இப்போது யார் உதவியும் இன்று வீடின்றி சாலையில் தங்கி தனது வாழ்க்கையை கழித்து வருகிறார். மெக்ல்யூர், தனது காதலனுடன் சேர்ந்து, தனக்கு உதவிய ஜானிக்க உதவ வேண்டும் என்று எண்ணினார்கள். தினமும் மெக்ல்யூரியும், அவரது காதலரும் சேர்ந்து ஜானியை சந்தித்து அவருக்கு தேவையான உணவு உடை மற்றும் பொருட்களை வழங்கி வந்தனர். ஆனால், அது அவருடைய வாழ்வுக்கு நிரந்தரமாக எதையாவது செய்ய வேண்டும் என்று இருந்தார் மெக்ல்யூர்.

நிதி திரட்டி

அவரது படம் மற்றும் கதையுடன் GoFundMe என்ற இணையத்தளத்தில் அவருக்கு பத்தாயிரம் டாலர்கள் நிதி திரட்டி அளிக்க பதிவு செய்தனர். ஆரம்பத்தில் இவர்களுக்கு 1700 டாலர்கள் தான் கிடைத்தது. ஆனால், குறுகிய காலத்திலேயே ஜானியின் கதை இன்டர்நெட்டில் வைரலாக பரவிடவே, பத்தாயிரம் டாலர்கள் உதவி கேட்க போன இடத்தில் மூன்று இலட்சங்களை கடந்து உதவி வந்துக் கொண்டே இருக்கிறது. தற்போது வரை அவருக்கு ரூ 2.5 கோடி பணம் வந்துள்ளது. அதை முழுவதையும் ஜானிக்கு கொடுத்துள்ளார். ஜானி நினைத்திருந்தால் அந்த இருபது டாலர்களை தனது இரவு உணவுக்கோ, மறுநாள் செலவுக்கோ பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர் அதை முழுவதுமாக நள்ளிரவில் தவித்துக் கொண்டிருந்த மெக்ல்யூர்க்கு கொடுத்து உதவியதால் பாரட்டு மழையும் நனைகிறார். அதுமட்டுமில்லாமல் மெக்ல்யூர் செய்த செயலும் மனிதன் இன்னும் நெஞ்சில் ஈரத்தடன் இருக்கிறார்கள் என எடுத்துக்துரைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here