இந்த ரெண்டு பொருளும் உங்க சரும பிரச்சனையை எப்படி போக்கும் தெரியுமா?

0
7673

சமையல் சோடா, மற்றும் எலுமிச்சை இரண்டும் எளிதாகவும் அதே சமயம் விலை மலிவாகவும் கிடைக்கக் கூடியது. நாம் வாங்கும் ரசாயனம் மிகுந்த காஸ்மெடிக் பொருட்களை விட மிகவும் பாதுகாப்பானது. பக்க விளைவுகள் தராது.

உங்க வீட்டில் இந்த ரெண்டு பொருட்களையு வனை வச்சுக்கோங்க. இந்த ரெண்டும் என்னென்ன பிரச்சனைகளிய போக்கும் என பார்க்கலாமா.

அக்குள் கருமை :

சிலருக்கு அக்குளில் இருக்கும் முடிகளை அகற்றுவதால் கருமையாக இருக்கும் இதனால் ஸ்லீவ் லெஸ் உடுப்புகள் போட முடியாது. அப்படி இருப்பவர்களுக்கு இந்த இரண்டும் வரப் பிரசாதம்.

அரை ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் அரை மூடி எலுமிச்சை நன்றாக கலந்து அதனை அக்குளில் பூசி காய்ந்ததும் குளிக்கவும். தொடர்ந்து ஒரு வாரம் இப்படி செய்து வந்தால், அக்குளின் கருமை மறைந்து மிருதுவாகும். வியர்வை நாற்றமும் வரவே வராது.

தழும்புகள் :

லேசான காயங்களின் தழும்புகள், முகப்பரு தழும்புகள் அவ்வளவு எளிதில் மறையாது. இந்த எலுமிச்சை சாறு கலந்த சமையல் சோடாவை தழும்பு உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வந்தால் தழும்புகள் விரைவில் மறைந்து விடும்.

கருமை :

வெயிலினால் சிலருக்கு உடனே சருமம் கருத்துப் போகும். சருமம் வெயிலினால் கருப்பானால் உடனே பழைய நிறத்திற்கு மாறாது. சில மாதங்கள் ஆகும். ஆனால் உடனடியாக இயல்பு நிறத்திற்கு வருவதற்கு இந்த சமையல் சோடா- எலுமிச்சை சாறு காம்பினேஷன் கை கொடுக்கும்.

வெயிலினால் கருத்துப் போன இடங்களில் எலுமிச்சை சாறில் சமையல் சோடா கலந்து தடவுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். தினமும் குளிப்பதஏகு முன் இவ்வாறு பூசி குளித்து வந்தால் கருமை மறையும்.

கரும் புள்ளி :

மூக்கைச் சுற்றிலும் சிலருக்கு மூக்கின் பக்க வாட்டில் கரும் புள்ளிகள் இருக்கு. மூக்கைத் தவிர, தாடை போன்ற இடங்களிலும் கரும்புள்ளிகள் வரும். இது அழுக்குகளும் இறந்த செல்களும் சருமத்திலேயே தங்குவதால் சருமத்தில் கரும் புள்ளிகளாக படிந்து விடும்.

 

இந்த கரும் புள்ளியை மறையச் செய்வதற்கு சமையல் சோடா- எலுமிச்சை சாறு அற்புத தீர்வை தருகிறது. 1 ஸ்பூன் சமையல் சோடாவில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து மூக்கு, மற்றும் கரும் புள்ளி உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்தல கரும் புள்ளிகள் மறைந்து விடும்.

சரும அலர்ஜி :

சிலருக்கு உணவினால் அல்லது சூரியக் கதிர்களால் அலர்ஜி ஏற்படு. அவர்கள் சமையல் சோடா- எலுமிச்சை சாறு கலந்த கலவையை சரும தடிப்புகள் இருக்கும் இடங்களில் தடவி சில நிமிடங்களில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் தடிப்புகள் மற்றும் சரும பருக்கள் மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here