ஸ்ட்ரெயிட்டனர் இல்லாமலேயே முடியை நேராக்கனுமா? இந்த ஒரு டிப்ஸ் யூஸ் பண்ணுங்க !!

0
721

அலை அலையா முடி இருப்பது இப்போது எவருக்கும் பிடிப்பது இல்லை. அது நேராக இருப்பதுதான் இப்போது ட்ரெண்டாக இருக்கிரது. இத்ற்கென பார்லர் சென்று ஆயிரக் கணக்கில் செலவு செய்து ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொள்கிறார்கள்.

ஆனால் முடியை மெஷின் கொண்டு நேராக்கிய பின் அடுத்து வரும் நாட்களில் வேகமாக கொத்து கொத்தாக முடி கொட்ட ஆரம்பிக்கும். முடியும் வறட்சி அடைந்து கோரையாக நிற்கும். இதற்கு காரணம் அதிகப்படியான சூடு முடியில் படும்போது முடியின் வேர் கால்கள் அதன் சூட்டை பொறுக்க முடியாமல் கொத்தாய் உதிர்கின்றன.

பார்லர் சென்று முடி நேராக்கினால் அழகு நிபுணர் சொல்லும் டிப்ஸ்களை மறக்காமல் தொடர்ந்து பின் பற்ற வேண்டும். ஆனால் நாம் அப்படியே விடுவதால் முடியின் அழகை இழக்க வேண்டியது இருக்கும்.

பார்லர் செல்லாமலே சிலர் வீட்டிலேயே ஹேர் அயர்னிங் மெஷின் வாங்கி வைப்பதுண்டு. இதனை ஏதாவது விசேஷ நாட்களில் முடியை நேராக்கிக் கொண்டு செல்வார்கள். இதுவும் தவறு. சாதரணமாக சூடு பட்டாலே முடி தனது தன்மையை இழந்துவிடும்.

இதில் அயர்னிங் செய்யும் போது முடி தனது முழு ஈரப்பதத்தையும் இழந்து விறைத்துவிடுகிறது. அதனால்தான் கோரையாக முடி பார்க்கவே விகாரமாக சிலருக்கு ஆகிவிடும்.

இதற்கு ஒரே தீர்வு, இயற்கை வைத்தியம்தான். 100 சதவீத நம்பிக்கையுடன் இந்த ஒரு குறிப்பை வார வாரம் நீங்கள் பயன்படுத்தினால் உங்கள் முடி ஸ்ட்ரெயிட்டனிங் செய்தது போல் நேராவது உறுதி. அதற்கான பொருட்களும் எளிதாக கிடைக்கக் கூடியவைதான்.

என்னென்ன பொருட்கள் தேவையென பார்க்கலாம்

தேவையானவை :

முட்டை – 2
பாதாம் எண்ணெய்- கால் கப்
ஆலிவ் எண்ணெய் – கால் கப்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

நன்மைகள் :

முட்டை :

முட்டை உங்கள் முடியை இயற்கையாக நேராக்கும் ஸ்ட்ரெயிட்டனர் என்று சொல்லலாம். அது கண்டிஷனர் கூட. இது முடிக்கு தடவும்போது பசை போல் இறுக ஒட்டிக் கொள்ளும். அரை அல்லது ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசும்போது முடி நேராகவே இருக்கும். வார வாரம் இதனை பயன்படுத்தும்போது ஒரு மாதத்திற்குள் உங்கள் முடியின் தன்மையில் வித்தியாசம் உணர்வீர்கள். அயர்னிங் செய்தீர்களா என மற்றவர்கள் கேட்கும்படி மாறி இருக்கும்.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெய் முடிக்கு பளபளப்பு தரும். மென்மையாக்கும். இதனால் உங்கள் முடி சொன்னபடி கேட்கும். இதுவும் கூந்தலை நேராக்கும். விட்டமின் ஈ இருப்பதால் ஈரப்பதத்தை உங்கள் கூந்தலில் தங்க வைக்கும்.

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் என்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியமானது. முடி வேர்க்கால்களை தூண்டும். இதனால் முடி அடர்த்தி கூடும்.

தேங்காய் எண்ணெய் :

உங்கள் தலைப் பகுதியிலுள்ள அதிக சூட்டினாலும் முடி உதிரலாம். அதனால் தேங்காய் எண்ணெய் சேர்க்கும் போது தலை குளிர்ச்சி அடையும். கூந்தல் நீளமாக வளர தேங்காய் எண்ணெயிலுள்ள புரதம் தேவைப்படுகிறது. இப்போது செய்முறையை காணலாம்.

தயாரிக்கும் முறை :

 

முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலந்து அதன் பின் 2 முட்டையை உடைத்து அதில் சேர்க்கவும். பின்னர் க்ரீம் பதம் வரும் வரை நன்றாக கலக்குங்கள். அப்போதுதான் ஒன்றோடுன்று சேரும். தலைமுடியிலும் சீராக பரவும்.

அதன் பின்னர். இந்த எண்ணெயை முதலில் தலையின் வேர்க்கால்களில் அதாவது ஸ்கால்ப்பில் படுமாறு தலை முடிவதும் தடவுங்கள். பின்னர் முடியின் நுனி வரை தடவி கூந்தலை கட்டிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு அலசுங்கள். முடியின் தரத்தை முதல் தடவையிலேயே உணர்வீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here