உங்க சரும அழகை பாதுகாக்க டார்க் சாக்லெட்டை எப்படி யூஸ் பண்ணனும்?

0
567

பொண்ணுங்களுக்கு ஒரே கல்லுல மூன்று மாங்காய்! ஏன் தெரியுமா? சாக்லெட் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனல அதனை சாப்பிடலாமான்னு எல்லம யோசிப்பாங்க. ஆனால் டரக் சாக்லெட் இருந்தா டேஸ்ட் மட்டுமல்ல ஆரோக்கியம், அழகு என மூன்றையும் பெறலாம். அப்போன்னா ஒரே கல்லுல மூன்று மாங்காய் தானே?

டார்க் சாக்லெட் உங்க சரும டோனை சூப்பராக்கும், வெயிலில் செல்வதால் உண்டாகும் சரும பாதிப்புகளை சாக்லெட் சீர் செய்யும் தெரியுமா?

சாக்லெட்டிலுள்ள ஃப்ளேவினாய்டு சூரிய பாதிப்புகளை குணப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை உடல் முழுவதும் அதிகரிக்கச் செய்வதால் சருமம் பொலிவாகும். சருமத்தின் அடர்த்தியை அதிகமாக்குவதல சுருக்கங்கள் வராது.

வெயில் காலத்தில் வெளியே செல்லும்போது சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமையை போக்குகிறது.

சாக்லெட்டை சாப்பிடுவதால்  ஆரோக்கியமட்டுமல்ல அழகிற்கும் நன்மைகள் தரும். அவற்றை என்ன என்று பார்க்கலாம்.

முடி உதிர்வு :

டார்க் சாக்லெட் கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. முடி உதிர்வை தடுக்கின்றது. தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் கூந்தல் உதிர்வு தடுக்கப்பட்டுகிறது.

முடி அடர்த்தி :

டார்க் சாக்லெட் முடி அடர்த்தியை அதிகப்படுத்தும், தினமும் ஒரு டார்க் சாக்லேட் சாப்பிடு வரும் போது முடி அடர்த்தி அதிகமாகும் என ஆய்வு சொல்கின்றது.

பொடுகு, தொற்று நோய்கள் :

தலைமுடியில் உண்டாகும் பொடுகு மற்றும் தொற்று நோய்களை வராமல் தடுக்கும். டரக் சாக்லெட்டை சாப்பிட்டு வந்தால் பொடுகு பிரச்சனை குணமாகும். பொடுகு மேற் கொண்டு வருவதும் தடுக்கப்படுகிறது.

டார்க் சாக்லெட் கொண்டு ரெசிபிகளும் செய்யலாம். அவை சரும சுருக்கங்கள். கருமை, சுருக்கம் போன்றவைகளை குணமாக்கும்.  டார்க் சாக்லெட்டினால் செய்யப்படும் அழகுக் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.

டார்க் சாக்லெட் ஃபேஸ் மாஸ்க் :

டார்க் சாக்லெட்டை உருக்கி அதனுடன் முல்தானி மட்டி மற்றும் கலப்பதற்காக சிறிது நீர் கலந்து அதனை முகம் கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவலாம்.

நன்மை :

முகம் தொய்வடைவதை தவிர்க்கலாம். முக இறுக்கமாகி, வயதான தோற்றத்தை தடுக்கும்.

டார்க் சாக்லெட் தேன் மாஸ்க் :

டார்க் சாக்லெட் உருக்கி அதனுடன் தேன் 1 ஸ்பூன் கலந்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தை இளமையாக வைத்திருக்க உதவும். சுருக்கங்களை மறைக்கும்.

டார்க் சாக்லெட் பழ மாஸ்க் :

டார்க் சாக்லெட்டை உருக்கியபின் அதனுடன் ஸ்ட்ரா பெர்ரி அல்லது பப்பாளியின் சாறு எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். அது சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.

டார்க் சாக்லேட் யோகார்ட் மாஸ்க் :

யோகர்டிலுள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்ற உதவும். சரும துவாரங்களை சுருங்கச் செய்து சருமத்தை இறுக்கும்.

முட்டை மாஸ்க் :

டார்க் சாக்லெட் , பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு  ஆகியவை இந்த குறிப்பிற்கு தேவைபடுபவை.

ஒரு துண்டு டார்க் சாக்லெட்டை உருக்கிக் கொண்டு அதனுடன் ஒரு ஸ்பூன் பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதனை முகம் மற்றும் கழுட்தில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். இப்படி செய்வதால் வெயிலினல உண்டகௌம் கருமை, கரும்புள்ளி மறையும். சருமம் பளபளப்பாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here