ஏன் ஜப்பான் பொண்ணுங்க சருமம் அவ்ளோ அழகு தெரியுமா? ஒரு கப் அரிசி கஞ்சிதான்!!

0
52

உண்மைதாங்க. நம்ம ஊர்ல மஞ்சள் எப்படி அழகுகு பூசுவோமா அப்படி அவங்க ஊர்ல அரிச் கஞ்சிதான். அரிசி கஞ்சியின் மகிமை தெரிஞ்சா சாதம் வடிச்ச தண்ணியை கீழே ஊத்த மாட்டீங்க. அவங்க சரும வயதான பின்னும் பளபளப்பா மின்னுவதற்கும்
சுருக்கமில்லாமல் சுத்தமான சருமம் இருப்பதற்கும் இந்த சாதம் வடித்த கஞ்சிதான் முக்கிய காரணம்.

உயிர் சத்துக்களான பி காம்ப்ளக்ஸ் அதிகம் நீங்க வடிச்ச கஞ்சிலதன இருக்கும்.அதில் அதிக விட்டமின் மற்றும் மினரல்கள் அதிகம் இருக்கிறது.

இந்த முக்கிய விட்டமின் மற்றும் மினரல்கள்தான் உங்கள் சருமத்திற்கு உயிரூட்டுகின்றது. இந்த அரிசி கஞ்சியை பயன்படுத்தும் முறையையும்.,அதனை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளையும் இப்போ பார்க்கலாம்.

அரிசி கஞ்சி சருமத்திற்கு தரும் நன்மைகள் :

முகப்பரு, கரும்புள்ளி, சுருக்கங்கள், தளர்ச்சி, முதுமை, பருத்தழும்புகள் போன்றவற்றை நீக்கிவிடும். பளிங்கு போன்ற சருமத்தை தரும். சருமம் சுத்தமாகும். கருவளையம் காணாமல் போகும். இளமை மீண்டும் திரும்பும்.

கூந்தலுக்கு அரிசி கஞ்சியின் நன்மைகள் :

அரிசி கஞ்சி கூந்தலுக்கு போஷாக்கை அளிக்கின்றது. கூந்தல் மின்னும். மிருதுவான கூந்தல் கிடைக்கும். சிறந்த கண்டிஷனராக விளங்குகிறது. முடி உதிர்தல் தடுக்கிறது.

சருமத்திற்கு :

சாதம் வடித்த கஞ்சி- தேவையான அளவு

தேன்- அரை ஸ்பூன்

பயன்படுத்தும் முறை ;

அரிசியை நீரில் போட்டு வேக வையுங்கள். நன்றாக வெந்ததும் உண்டாகும் கஞ்சியை வடிக்க வேண்டும். இந்த கஞ்சியை ஆற வைத்து தேவையான அளவு எடுத்து அதில் அரை ஸ்பூன் தேனை கலந்து முகம் , கழுத்தும் பகுதியில் தடவ வேண்டும்.

15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் நீங்கள் என்றும் இளவரசியாய் மிளிரலாம்.

கூந்தலுக்கு :

தலைக்கு குளித்தபின், கடைசியாக இந்த சாதம் வடித்த கஞ்சியை தலைமுழுவதும் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். சில நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கூந்தல் மிருதுவாக பளபளப்பதை கண்டுணர்வீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here