உங்களுக்கு எண்ணெய் சருமமா? இதெல்லாம் முக்கியமா கவனிங்க!

0
337

 

எண்ணெய் சருமத்தை எப்படி பராமரிப்பதென்றே சிலருக்கு தெரியாது. எண்ணெய் சருமத்திற்கென விற்கும் க்ரீம், சோப் என வாங்கி ஏமாறிப் போனவர்கள் அதிகம். முகப்பருக்களும் கரும்புள்ளிகளும் அதிகமானதுதான் மிச்சம் என்று புலம்புபவர்களும் உண்டு.

நமது சருமத்தில் சபேஷியஸ் சுரப்பி இருக்கிறது. அது சருமத்த்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க செபம் எண்ணெயை சுரந்து கொண்டிருக்கும். வெளிப்புறத்திலிருந்து வரும் அழுக்கு, தூசிலிருந்து நமது சருமத்தை பாதுகாக்க செபம் சுரக்கும்.

ஆனால் சிலருக்கு அந்த எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதுதான் எண்ணெய் சருமம் என்று கூறுகிறோம். இப்படி அதிகப்படியான எண்ணெய் சுரந்தல முகப்பரு, கரும்புள்ளி போன்ற்ற்வை அதிகம் உண்டாகும். இதற்கு ஒரே வழி, எண்ண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துவதுதான்.

இதில் நிறைய பேர் எண்ணெய் சருமம் என்று அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டு இருப்பார்கள். குறிப்பாக ஏற்கனவே எண்ணெய் சருமம் என்று முகத்தில் எண்ணெய் தடவ மாட்டார்கள். இது தவறு. முகத்தில் வறட்சி அதிகம் இருந்தால், சுரப்பி மேலும் எண்ணெய் சுரக்கத் தோன்றும் இதனால் இன்னும் அதிகமாக எண்ணெய் சுரக்க ஆரம்பிக்கும். ஆகவே குளிர்காலத்தில் முகத்தில் எண்ணெய் தேய்க்காமல் இருக்காதீர்கள்.

க்ளென்சர் :

அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்த க்ளென்சர் பயன்படுத்த வேண்டும். க்ளென்சர் நல்ல தரமானதாக பார்த்து வாங்குவது அவசியம். இல்லையென்றல நம் வீட்டிலேயே நல்ல தரமான க்ளென்சர் இருக்கிறது. எது தெரியுமா? பால்,உருளைக் கிழங்கு சாறு இவையெல்லாம் இயற்கையான க்ளென்சர்.

டோனர் :

டோனர் ஆக்லஹால் இல்லாத டோனரை பயன்படுத்த வேண்டும். டோனர் முகத்தில் தடவி அதனால் அலர்ஜி உண்டானால் அது ஆல்கஹால் இருக்கும் டோனர். இதற்கு இயற்கையான டோனரான ரோஸ் வாட்டரை முகத்திற்கு பயன்படுத்தலாம்.

ஃபேஸ் மாஸ்க் :

வாரத்துக்கு ஒரு நாள் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை தொய்வடைவதை தடுக்கும். முல்தனை மட்டி அல்லது சந்தனத்தை மாஸ்க்காக போடலாம்.

மாய்ஸ்ரைஸர் :

எண்ணெய் சருமத்திற்கு மாய்ஸ்ரைஸர் போடலாம என நிறைய பேர் நினைப்பார்கள். ஆனால் மாய்ஸ்ரைஸர் போடாமல் இருந்தால் சருமம் வறட்சியாகி இன்னும் அதிகமாக எண்ணெய் சுரக்க ஆரம்பிக்கும்.

எண்ணெய் சருமத்திற்கான மேக்கப் டிப்ஸ் :

எண்ணெய் சருமம் மேக்கப் போடும் போது சற்று கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. ப்ரைமர் போடும் போது எண்ணெய் இல்லாத ப்ரைமர் பயன்படுத்துங்கள்.
ஃபவுண்டேஷனை விட கன்சீலர் பயன்படுத்துவது நல்லது எது பயன்படுத்தினாலும் எண்ணெய் இல்லாத சாதனங்களை பயன்படுத்த வேண்டும்.
அதன் பின் மேக்கப் ப்வுடர் பயன்படுத்தும் போது ஷிம்மர் இல்லாத மேக்கப் பவுடர் பயன்படுத்துங்கள்.

கண்ணிற்கு காஜல் பயன்படுத்தும் போது வாட்டர் ப்ரூஃப் காஜல் பயன்படுத்துவது நீண்ட நேரம் கலையாம்ல இருக்க உதவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here