சுவாசப் பிரச்சனைகளை குணப்படுத்தும் பிரியாணி இலை!!- பயன்படுத்தும் முறை!!

0
1654

நுரையீரல் அல்லது சுவாசக் குழாயில் தொற்று அல்லது அலர்ஜி இருப்பவர்களுக்கு பருவ நிலை மாறும்போது பாதிப்புகள் அதிகமாகும். குறிப்பாக குளிர் காலம் மற்றும் மழைக் காலங்களில் அதிகமாக தொடர் இருமல், சுவாசிக்க சிரமம், மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகும். இவர்களுக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால், நுரையீரல் தொற்று உடனடியாக உண்டாகும்.

பிரியாணி இலை நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில் கரபோஹைட்ரேட், கொழுப்பு, புரதம், மற்றும் விட்டமின் சி, மினரல் போன்றவையும் கொண்டுள்ளது. இது பல பாதிப்புகளுக்கு நிவாரணியாக செயல்படுகிறது.

இது ஜீரணத்திற்கு உதவுகிறது. நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டியை குணமாக்குகிறது. வாய்வுத் தொல்லையைப் போக்கும். பசியை தூண்டும் பண்புகளை கொண்டுள்ளது.
ஒல்லியாக போஷாக்கின்றி இருப்பவர்கள், சரியாக சாப்பிடாத பிள்ளைகள் பிரியாணி இலையை உணவில் சேர்த்தால், பசி ஏற்பட்டு நன்றாக சாப்பிடுவார்கள்.

இதில் கிருமி எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றிற்கு எதிராக செயல்படுகிறது. தொற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. அவ்வகையில் தொண்டை கரகரப்பு, நுரையீரல் பாதிப்புகள் போன்ற்றவற்றிற்கு மருந்தாகவும் இது உதவுகிறது.

நீங்கள் சுவாசப் பிர்ச்சனைகளில் பாதிக்கப்பட்டிருந்தல் பிரியாணி இலையை மருந்தாக பயன்படுத்திப் பாருங்கள். விரைவில் பலன் கிடைக்கும்.

பிரியாணி இலை ஆவி பிடித்தல் :

தேவையானவை :

நீர்- 2 கப்
பிரியாணி இலை- 5

செய்முறை :

நீரை நன்றாக கொதிக்க வைத்து பிரியாணி இலைகளை பொடியாக அதில் போட்டு உடனடியாக அடுப்பை அணைத்து, ஒரு கெட்டியான துணியினால் முகத்தை மூடி ஆவி பிடிக்க வேண்டும். பிரியாணி இலைக்கு பதிலாக பிரியாணி இலை எண்ணெயையும் பயன்படுத்தலாம். கொதிக்கும் நீரில் சில துளி பிரியாணி இலை எண்ணெய் விட்டு ஆவி பிடிக்கலாம்.

இவ்வாறு செய்யும் போது சுவாசப் பாதையில் இருக்கும் தொற்றினை போக்கிவிடும். கிருமிகள் அழியும். நுரையீரலில் உள்ள கபம் கரையும். மூக்கடைப்பு விலகும்.

பிரியாணி இலை சிரப் :

வறண்ட இருமலைப் போக்க பிரியாணி இலை சிரப் சிறந்த மருந்தாக இருக்கும். இந்த சிரப்பை வீட்டில் தயாரிக்கலாம். எதிர்ப்பு சக்தி கொண்டது. கிருமிகளை அழிக்கும். சுவாசப் பாதையில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.
தேவையானவை :

நீர்- 2 கப்
பிரியாணி இலைகள்- 6
பழுப்பு சர்க்கரை-6 ஸ்பூன்
எலுமிச்சை – 1

செய்முறை :

முதலில் நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் பிரியாணி இலைகளைப் போட்டு கொதிக்க வையுங்கள். 15 நிமிடம் அரை கொதிக்க விடவும். பிரியாணி இலை நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து நீரை வடிக்கட்டவும். அதன் பின்னர் அதில் பழுப்பு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள்.

இந்த சிரப்பை ஒரு காற்று புகா பாட்டிலில் ஊற்றி இறுக்கமாக மூடவும். அதனை 7 நாட்கள் வரை குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருக்கவும். பின்னர் எடுத்து இருமல் மற்றும் சுவாச பாதிப்புகள் இருக்கும் போது இரண்டு ஸ்பூன் குடிக்கவும்.

பிரியாணி இலை ஒத்தடம் :

தேவையானவை :

நீர்
பிரியாணி இலை

முதலில் நீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் பிரியாணி இலைகளைப் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதன் பின் அதில் ஒரு துணியினல நனைத்து நெஞ்சுப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கவும். இது கபத்தை குறைக்க உதவுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here