மல்லையா சொத்துக்களை விற்கலாம்.. அதிரடி உத்தரவு..!

0
540

இந்திய வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையா தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர தற்போது மத்திய அரசும், அமலாக்க துறையும் வழக்கு தொடுத்து லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மல்லையாவிற்குக் கடன் கொடுத்த வங்கிகள் அமலாக்க துறையிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், அமலாக்க துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மல்லையா சொத்துக்களை விற்பனை செய்யலாம் எனவும் விற்பனைக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை என்றும் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கருப்பு பண ஒழிப்பு, அமலாக்கத் துறை, சிபிஐ, வங்கி எனப் பல அமைப்புகள் விஜய் மல்லையாவின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ள இந்த நிலையில் இந்தச் சொத்துக்களை விற்பனை செய்து 9000 கோடி ரூபாய் கடனில் கணிசமான தொகையைத் தீர்க்க முடியும் என இவ்வமைப்புகள் நம்புகிறது.

தற்போது கைப்பற்ற சொத்துக்களை விற்பனை செய்யப்படும் நிலையில் இதன் தொகையை நீதிமன்றத்தின் வாயிலாகத் தான் செல்லவேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here