வங்காள தேசத்தில் 139 பேருக்கு மரண தண்டனை விதிப்பு!

0
173

வங்காள தேசத்தில் கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட 575 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது. 2009 ஆம் ஆண்டு வங்காள தேசத்தில் பில்கானா பகுதியில் நடைப்பெற்ற கலவரத்தில் ஆயுதப் படை வீரர்கள் தலைமை அலுவலகத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் உயர்அதிகாரிகள் 57 பேர் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு நடத்திய பேச்சு வார்த்தையில் சரணடைந்தார்கள். இந்த தாக்குதல் தொடர்பாக கொலை, கொள்ளை, பொது சொத்தை சூறையாடுதல், அரசுக்கு எதிரான கலகம் விளைவித்தல் என பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் 58 தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த டாக்கா கீழமை நீதிமன்றம் 152 பேருக்கு மரண தண்டனையும், 423 பேருக்கு ஆயுள் உள்ளிட்ட சிறை தண்டனையும் விதித்து கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. குற்றம்சாட்டப்பட்ட 277 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து டாக்கா நகரில் உள்ள உயர்நீதிமன்றத்தின் மூன்றுநபர் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 139 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் 146 பேரின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற அமர்வு இன்று உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here