தமிழக கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஒய்வு பெற்றார்..!

0
1036

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமானவராகத் திகழ்ந்த தமிழக வீரர் பத்ரிநாத் அனைத்து விதமான கிரிக்கெட் இல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதான பத்ரிநாத் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தார், இவர் 2008 2011 வரையிலான காலத்தில் 2 டெஸ்ட், 7 ஓன்டே, 1 டி20 போட்டியில் விளையாடினார்.

சுமார் 145 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள பத்ரிநாத் 32 சதம், 45 அரைசதம் என மொத்தம் 10,245 ரன்களை எடுத்துள்ளார். மேலும் பத்ரிநாத் தற்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் கரைக்குடி அணியின் பயிற்சியாளராக உள்ளார். மேலும் தற்போது கிரிக்கெட் கம்மென்டரியும் செய்து வருகிறார்.

தனது ஓய்வு குறித்துப் பேசிய பத்ரிநாத், கிரிக்கெட்டில் இதுவரை சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறேன். நான் ஆடிய விதமும், எனது செயல்பாடும் மன நிறைவாக இருக்கிறது. ஆனால் ஓய்வு பெறுவதில் எனக்கு எந்த விதமான மன வேதனையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here