படத்தில்தான் மண்டு! நிஜத்தில் பிரில்லியன்ட் சாதனா! என்ன செய்தார் தெரியுமா?

0
504

தங்க மீன்கள் படத்தில் செல்லம்மா வாக நடித்த பேபி சாதனா துபாயில் அவருடைய தாய் தந்தையோடு வசித்து வருகிறார். தங்க மீன்களில் சரியாக படிப்பு வராத குழந்தையாக நடித்து அசத்தி இருப்பார். இவரின் நடிப்பிற்காக அவார்டுகள் வாங்கி இருக்கிறார்.

அவர் நிழலில்தான் சரியாக படிக்காத பிள்ளை. ஆனால் நிஜத்தில் நல்ல படிப்பாளி.
அவருக்கு இளவரசி டயானா விருது சமீபமாக கிடைத்துள்ளது. எதற்கு தெரியுமா? தொடர்து படியுங்கள்.

என்றும் மக்களின் இளவரசியாக பிரட்டன் நாட்டு மக்களின் மனதில் வாழும் டயானாவின் நினைவாக “டயானா விருது ஆண்டு தோடும் வழங்கப்படுகிறது.

சமூக வளர்ச்சிக்கு பாடுபடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இளவரசி டயானா விருது வழங்க்ப்படுகிறது.

சாதனா இந்த வயதிலேயே சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவருடைய சமூக சேவையை அங்கீகரிக்க நினைத்த இவருடைய பள்ளி இந்த விருதிற்கு சாதனாவின் பெயரை பரிந்துரைத்தது. இதில் சாதனாவிற்கு டயானா விருது கிடைத்துள்ளது. இதற்கு காரணமே இயக்குனர் ராம் என்று சாதனா கூறுகிறார்.

பேரன்பு படத்திலும் சாதனா நடித்து வருகிறார். இப்படத்திற்காக மாற்றுத் திறனாளி குழந்தைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உனக்கு தெரிந்த விஷயங்களிய இந்த குழந்தைகளுக்கும் கற்றுத் தா என்று இயக்குனர் ராம் சொன்னதால் சாதனா அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார்.

ஆட்டிஸம் இருந்த குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வந்தார். பின்னர் அதனை எப்போதும் செய்வதை வழப்படுத்திக் கொண்டுள்ளார். ஆட்டிஸம் குழந்தைகளுக்கு நடனம். ஸ்பீச் தெரபி, போன்றவை கற்றுக் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட அவருடைய பள்ளி நிர்வாகம் அவருக்கு டயானா விருதிற்காக பரிந்துரைத்துள்ளது.

இவருடைய ஸேவை மற்றும் இயக்கத்தை தொடர்ச்சி கவனித்து அதன் பின்னே இந்த விருதை பிரட்டன் அரசு கொடுத்துள்ளது.

நம தமிழகத்தை சேர்ந்த சாதனாவிறு இந்த விருதை கொடுத்தது நமக்கும் பெருமைதான். நல்லதை விதைத்தால் நல்லதையே அறுவடை செய்யலாம். பிள்ளைகளுக்கு நல்லதையே சொல்லித் தருவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here