டாஸ் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்தது பாகிஸ்தான்.. இந்திய அணியின் மனநிலை என்ன..?

0
799

ஐக்கிய அரபு நாடுகளில் மிகவும் முக்கியமான நகரான துபாயில் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்து வருகிறது. இத்தொடரின் 5வது போட்டி புதன்கிழமை மாலை 5 மணிக்கு அனைவரும் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்த இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டி நடக்க உள்ளது.

இப்போட்டியில் “பி” பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், இரு நாடுகள் மத்திலான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

ஆசியா கோப்பை தொடரில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஹாங்காங் அணியை எதிர்கொண்ட இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது. நேற்றைய போட்டியில் தோனி 0 ரன்களில் அவுட் ஆனது தோனி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்தது.

ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், இரண்டாவது போட்டோயில் இந்தியாவிடமும் தோல்வி அடைந்ததால், ஆசியா கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

“ஏ” பிரிவிலும் இதுவரை இரண்டு போட்டியில் தோல்வியைத் தழுவிய இலங்கை அணி வெளியேறியது. அந்தப் பிரிவில் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. “பி” பிரிவில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா அடுத்தச் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமேயில்லை.

இப்போட்டிக்கான டாஸை பாகிஸ்தான் வென்று பேட்டிங்-ஐ தேர்வு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here