புதிய ஜி.எஸ்.டி எவைகளுக்கு வரி குறைக்ப்பட்டுள்ளது தெரியுமா?

0
168

ஒரே நாடு ஒரே வரி என்ற மத்திய அரசின் நாடு முழுவதும் 5% முதல் 28% வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அதனால் பல சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு தொழிலை நடத்த முடியாமலும், அதிமான வரி விதித்து மக்களுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் பல உணவகங்களில் கடும் விலையேற்றம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இதனால் மக்களும் வியாபாரிகளும் கடும் சிரமத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த சரக்கு மற்றும் சேவை வரி பல சிறு தொழிலார்கள் தாங்கள் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு போய்விட்டனர். தற்போது ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இது இதனால் வியாபாரிகள் வணிகர்கள் மற்றும் மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். சிகரெட் போன்ற 50 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28% ஜிஎஸ்டி வரி உள்ளது. மீதியுள்ள மற்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி 18% தற்போது குறைத்துள்ளது மத்திய அரசு.

12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ள பொருட்கள்

சாக்லேட், மரச்சாமான்கள், சோப்பு, அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பூ, மார்பிள், டைல்ஸ், தொலைக்காட்சி, வானொலி சாதனங்கள், உள்ளிட்ட 178 பொருட்களுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. வெட் கிரைண்டர் ஆகியவை 18 சதவிகித வரி விதிப்பில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட பால்

பதப்படுத்தப்பட்ட பால், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவை ஏற்படுத்தாத உணவு, அச்சக மை, மூக்குக் கண்ணாடியின் ஃபிரேம், விவசாய இயந்திரங்கள் உள்ளிட்ட 13 பொருட்களுக்கான வரி 18 % இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.

5 சதவிகித வரி

கடலை மிட்டாய், பொரி உருண்டை, சமையல் மிளகாய்ப்பொடி உள்ளிட்ட 6 பொருட்களுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி வலைகள், ஆடைகள், கயிறு உள்ளிட்ட 8 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 12 சதவிகித வரி 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

இனிமேல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி

புதிய நடைமுறைப்படி, ஏசி, ஏசியற்ற ரெஸ்டாரண்டுகள் என்று தரம்பிரித்து இனி ஜிஎஸ்டி விதிக்கப்பட மாட்டாது. அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும் இனிமேல் 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்படும். ஆனால் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு பழைய வரி விதிப்பே பொருந்தும். அதேபோல ஒரு நாளைக்கு 7500க்கும் மேல் தங்கும் வாடகை வாங்கும் ஹோட்டல்களுக்கும் பழைய வரி விதிப்புதான் பொருந்தும். கேட்டரிங் செய்யப்படும் உணவுக்கும் பழைய வரி விதிப்பு பொருந்தும்.

பதப்படுத்தப்பட்ட மீன்

உலர வைக்கப்பட்ட காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட மீன் உள்ளிட்ட 6 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 5 சதவிகித வரி இப்போது முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here