சருமம் என்றும் 16 ஆக மிளிர பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா சொல்லும் 3 ரகசியங்கள்!!

0
34

சாதரணமாகவே நமக்கு வெள்ளித்திரை நடிகைகள் என்றாலே ஒரு சின்ன வியப்பு
இருந்து கொண்டே இருக்கும். அதுவும் உச்ச நட்சத்திரமாக விளங்குபவரகள், அவர்களின் ஆடை அலங்காரங்கள், சருமம் மற்றும் கூந்தல் அழகு போன்றவற்றைப் பார்த்து நாம் வியக்காமலில்லை.

எல்லாம் மேக்கப் என்று ஒற்றை வரியில் நமது ஆதங்கத்தை முடித்துக் கொள்வோம்.
ஆனால் யோசித்துப் பாருங்கள். வெறும் மேக்கப் மட்டும் எப்போதும் அவர்கள் போட்டுக்
கொண்டிருப்பதால் நம்மை விட மூன்று மடங்கு அவர்களில் சருமத்தை அவர்கள்
பாதுகாக்க வேண்டும். உண்ணும் உணவிலும் தங்கள் அழகை பாதுகாக்கும் வண்ணம்
டய மேற்கொள்ள வேண்டும்.

மேக்கப்பையே எப்போதும் போட்டுக் கொள்ள விரும்ப மாட்டரகள். காரணம் அவை
சருமத்தை பாழ்படுத்தும் என்பதை நன்றாக அறிவார்கள்.

இதனால் அவர்களுக்கென ப்ரத்யோகமாக ப்யூட்டீஷியன் மற்றும் டயட்டீஷியன்
போன்றவர்களை அவர்கள் வைத்துக் கொள்வரகள்.

அனுஷ்கா சர்மாவின் பால் போன்ற சருமத்திற்கு மிக முக்கிய காரணம் மருத்துவர்
காமாடியா என்பவர். இவர்தான் அவருடைய சரும மற்றும் கூந்தல் அழகிற்கான டயட்
பரிந்துரைப்பவர்.

அவர் சருமத்திற்கு எந்த உணவு நல்லதோ அதைத்தான் பரிந்துரை செய்வார்.
அதைத்தான் அனுஷ்காவும் உண்கிறார். அதோடு அவருடைய காதல் கணவர் விராட்
கோஹ்லிக்கும் அவரை அறிமுகம் செய்துள்ளார்.

அவர் உங்கள் சருமம் என்றும் இளமையுன் பிரகாசிக்க சொல்லும் உணவுகள் எவை
தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

உங்கள் சருமம் என்றும் பளபளக்க அவர் தரும் குறிப்புகள் :

ஒமேகா-3 உணவுகள் :

கண்டிப்பாக தினமும் ஒமேகா-3 உணவுகள் சாப்பிட வேண்டும். இவை சரும
முதுமையை தடுக்கின்றது. கோலாஜன் உற்பத்தியை அதிகமாக்குவதால், சுருக்கங்கள்
தடுக்கப்படுகிறது.சரும ஈரப்பதத்தை தக்க வைக்கின்றது.

பப்பாளி :

தினமும் அல்லது வாரம் 4 நாட்கள் பப்பாளியை உண்ணுங்கள். இது சருமத்திற்கு
மிகவும் அருமையானது. அதிலுள்ள பெப்பய்ன் சருமத்தை மென்மையாக்கும்.
முதுமையை தடுக்கும் சிறந்த பழம். என்றும் இளமையாக இருக்க பப்பாளியை உங்கள்
டயட்டில் சேர்க்க வேண்டும்.

கோ-என்சைம் Q 10 :

ஏதோ ஃபார்முலான்னு நினைக்காதீங்க. இது ஒரு உபரி நொதி. இது புரத கட்டமைப்புக்கு முக்கியம். இது நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, உங்கள் முடி மற்றும் சருமம் மிகவும் கவர்ச்சியாகும். கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான சத்து இது.

கோழியின் நெஞ்சு, சால்மன் மீன், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், புரோக்கோலி, பசலைக் கீரை, திராட்சை, அவகேடோ போன்ற உணவுகளில் இருப்பதால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here