ஆந்திர மக்களுக்கு அடித்தது யோகம்.. சந்திரபாபு அறிவிப்பு..!

0
650

ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்து சென்ற பின்பும் தன் மாநிலத்தை அனைத்து துறையிலும் வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்றும், மக்களுக்கு அதிகளவிலான நன்மைகளை அளிக்க வேண்டும் என்ற முடிவுடன் இம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயடு பணியாற்றி வருகிறார். இவரின் பல திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் திங்கட்கிழணை சந்திரபாபு வெளியிட்ட அறிவிப்பின் மூலம் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதாவது MBC பிரிவில் இருக்கும் மக்களுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை டெலிகான்பெரென்சிங்-இல் மாவட்ட கலெக்டர்-களிடம் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதனுடன் BC பிரிவில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு கல்விக்கான உதவி தொகையாக 15 லட்சம் ரூபாயும், 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஜோதிபா பூலே நினைவகம் அமைக்கவும், கூடுதலாக 69 குருக்குள் பள்ளிகளையும் அமைக்க தேவையான நிதியை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் தற்போது அறிவித்துள்ள இலவச மின்சார திட்டம் தமிழ்நாட்டில் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here