45 நாட்களுள் நரை முடியை கருப்பாக்கும் ஒரு இயற்கை பொருள்!!

0
7072

நரை முடி இன்றைய காலக்கட்ட்த்தில் இளம் வயதிலேயே வருவது சகஜமாகி விட்டது. காலத்திற்கு தகுந்தாற்போல் வரும் இந்த பிரச்சனை நம்முடைய அக்கறையின்மை காட்டுகிறது.

நரை முடி வருவதற்கு ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் துரித உணவுகளை மட்டுமே சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான இரும்புச் சத்தும், புரத சத்தும் குறையும் போது முடி வளர்ச்சி தடை பட ஆரம்பிக்கும். இதனால் இளம் வயதிலேயே நரை முடி வரலாம்.

அதன் பின் கண்ணில் படும் ஷாம்புக்களை போடுவது கலரிங் செய்வது போன்ற்றவை துரிதமாக நரை முடியை உண்டாக்கச் செய்யும். இதற்கு தீர்வு என்ன?

கரிசலாங்கன்னி, நிறைய நன்மைகளை உடல் நலத்திற்கும் கூந்தலுக்கும் தருகின்றது இரத்த சோகை, தோல்நோய்கள் போன்றவையும் கட்டுப்படும். கரிசாலை இலைகளை, கீரையாகத் தொடர்ந்து உபயோகித்து வந்தால்முடி வளர்ச்சியைத் தூண்டும்.

நரை முடியை கருமையாக மாற்ற வெறும் கூந்தலை பராமரிப்பதோடு உள்ளுக்குள்ளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்க :

புதிதான கரிசலாங்கண்ணியை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு அதன் சாறை எடுத்து கொள்ளுங்கள். பின்னர். ஒரு வாணிலியில் கருப்பட்டி அல்லது பனங் கற்கண்டைப் போட்டு சிறிது அரை கப் நீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் கரிசலாங்கண்ணி சாறை ஊற்றி அது நன்றாக கொதிக்கும் போது இறக்கி விடுங்கள். இதனை 45 நாட்கள் குடித்து வந்தால் நரைமுடி மறையும்.

தலைக்கு தேய்க்க :

தேவையானவை :

கரிசலாங்கண்ணி சாறு – ஒரு கப் ,
தேங்காய் எண்ணெய் – 2 கப்
விளக்கெண்ணெய் – 1 கப்

முதலில் கரிசலாங்கண்ணி இலைகளை கழுவி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரு எண்ணெய்களையும் கலந்து சூடு படுத்துங்கள். சூடு ஆனதும் கரிசலாங்கண்ணி சாறை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள்.

அதிலிருந்து நீர்த்தன்மை முற்றிலும் வற்றிய பின் எண்ணெயாக மாறும்போது அடுப்பை அணைத்து, அதனை வடிகட்டி ஒரு பாட்டிலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் தலை முடியில் தேய்த்து தொடர்ந்து 45 நாட்கள் பயன்படுத்தி வந்தால் நரை முடி மறையும்.

செய்முறை -2

கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் காய வைத்து பொடி செய்து அதனை சல்லடையில் சலித்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் காலையில் அரை ஸ்பூன் அளவு தேனில் கலந்து தொடர்ந்து 2 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நரை முடி மறைந்து கருமையாக முடி வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here