ஒரு கள்ளதொடர்பின் விலை 69 பில்லியன் டாலர்.. அமேசான் தலைவருக்கு வந்த சோதனை..!

0
581

உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமாக உயர்ந்திருக்கும் அமேசான், இன்று முன்னணி நிறுவனங்களாக மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகிள் ஆகிய நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியை உருவாக்கி வரும் இந்த நிலையில், அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பீசோஸ்-இன் கள்ளத்தொடர்பு செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

54 வயதாகும் ஜெப் பிசோஸ் பல போராட்டங்களுக்கு பின் அமேசான் நிறுவனத்தைத் துவங்கி இன்று உலகின் மாபெரும் நிறுவனமாக உருவாக்கியது மட்டுமல்லாமல் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 137 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.

இத்தகைய உயர் இடத்தில் இருக்கும் ஜெப் பீசோஸ் செய்தி வாசிப்பாளர், ஹெலிக்காப்டர் பைலட், நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளர் என பன்முக திறன் கொண்ட லாரன் சான்சீஸ் என்ற 49 வயது பெண்ணுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

லாரன் சான்சீஸ்-ம் ஹாலிவுட் டேலென்ட் ஏஜென்ட் பட்ரிக் வையிட்செல்-யிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதில் என்ன கொடுமை என்றால் ஜெப் பீசோஸ் மற்றும் பட்ரிக் வையிட்செல் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள், அதேபோல் பிசோஸின் மனைவி மெக்கென்சி-யும் லாரன் சான்சீஸ்-யும் தோழிகள்.

சுமார் 25 வருட திருமண வாழ்க்கையில் ஜெப் பீசோஸ் மற்றும் மெக்கென்சி ஆகியோருக்கு 4 பிள்ளைகள், பிசோஸின் ஆரம்ப காலத்தில் இருந்து மெக்கென்சி இருப்பதால் இவர்களுக்கு இடையில் எவ்விதமான சொத்து பகிர்மான ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை.

இதனால் ஜெப் பீசோஸ் மற்றும் மெக்கென்சி-யின் விவாகரத்துக்குப் பின் சொத்து மதிப்பு சரி பாதியாகப் பிரிக்கப்படும் என கூறப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் ஜெப் பிசோஸிடம் அமேசான் நிறுவனத்தின் 16 சதவீத பங்குகள் உள்ளது. இதேபோல் அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் ஜெப் பிசோஸ் மற்றும் மெக்கென்சி பெயரில் உள்ளது.

இந்நிலையில் விவாகரத்துக்குப் பின் மனைவி மற்றும் 4 பிள்ளைகளுக்கென செட்டில்மென்ட் செய்தால் நிச்சயம் ஜெப் பிசோஸ் தனது மொத்த சொத்து மதிப்பில் சரி பாதியைக் கொடுத்தாக வேண்டும்.

இதனால் மெக்கென்சி சுமார் 69 பில்லியன் டாலர் தொகையை பெறுவார். இதன் மூலம் மெக்கென்சி உலகின் மிகப்பெரிய பெண் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பார்.

இவை அனைத்திற்கும் காரணம் கள்ள தொடர்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here