மிரட்டும் 2.0 டீசர்.. ஹாலிவுட்க்கு இணையான ஒரு படம்..!!

0
4712

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் எந்திரன் படத்தின் 2வது பாகம் 2.0 படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்திப் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரித்திருக்கும் லைகா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் 2.0 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

2.0 படத்தில் ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக அக்ஷய் குமார் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் இப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு ஏர் ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார்.

டீசர் துவக்கத்திலேயே ஒரு செல்போன் டவரில் ஒரு உடல் தூக்கில் தொங்குகிறது. அதனைச் சுற்றி பல ஆயிரம் பறவைகள் பறந்து வருகிறது. இந்தச் சீனில் இருந்து தான் டீசர் துவங்குகிறது.

அடுத்தச் சீனில் மக்களிடம் இருக்கும் அனைத்துப் போன்களும் விண்ணிற்கு ஈர்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட்போனால் உருவான ஒரு பிரம்மாண்ட கழுகு உருவாகிறது. இந்தக் கழுகை பார்க்கும் போது அவென்ஜர், ஐயர்ன் மேன் போன்ற படங்கள் நினைவுபடுத்துகிறது.

இந்தப் பிரம்மாண்ட கழுகு பொதுச் சொத்துக்களை நாசம் செய்யும் நிலையில் மக்களைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் ஹீரோ ரஜினி அலைஸ் வசீகரன் என்ற விஞ்ஞானியும் உள்ளார்.

மக்களையும் ஊரையும் காப்பாற்ற சிட்டி தான் சரியான தீர்வு என ரஜினி கூற களத்தில் மீண்டும் இறங்குகிறது சிட்டி அப்கிரேடெட் வெர்ஷன். இப்புறம் படம் முழுக்க இருதரப்புக்கும் சண்டை தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here