உடல் எடையை குறைக்க வைக்கும் இஞ்சி கற்றாழை ஜூஸ் எப்படி தயாரிப்பது?

0
95

கற்றாழை மிகப் பல அரிய நன்மைகளை கொண்ட ஒரு செடி. முக்கியமாக இரைப்பை சம்பந்தப்பட்ட எல்லா நோய்களையும் தடுக்கும் அரணாக இது விளங்குகிறது.அல்சர்,
புண்களுக்கும், கொழுப்பு கல்லீரல், மருந்தாக இருக்கிறது.

முக்கியமாக உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. கற்றாழையை பயன்படுத்துவதற்கு முன் அந்த இழையை இரண்டாக பிரித்து உள்ளிருக்கும் ஜெல்லை வழித்து எடுத்து அதனை நன்றாக ஓடும் நீரில் கழுவுவது முக்கியம். 6, 7 தடவை அதன் மஞ்சள் நிறம் முழுமையாக போகும் அரை கழுவி பின் அதனை பயன்படுத்த வேண்டும்.

 

உடல் எடையை குறைக்க கற்றாழை மற்றும் இஞ்சி பயன்படுத்துவதால் வேகமாக பலன் தரும். இஞ்சி நச்சுக்க்ளை வெளிய்யேற்றும் கொழுப்பை கரைக்கும், கற்றாழை
ரத்தத்தை சுத்தப்பட்த்தும் மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி கொழுப்பை எரிக்கச் செய்வதால் உடல் எடை குறைவதில் கைமேல் பலன் தரும்.

பலருக்கு கற்றாழை ஜூஸ் எப்படி செய்வதென்று தெரியாது. அதனால் இஞ்சி கற்றாழை ஜூஸை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – ஒரு முழு இலை.
எலுமிச்சை – 1
தேன் – தேவையான அளவு
இஞ்சி – 1/2 இன்ச்
உப்பு – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் எலுமிச்சை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து, வடிகட்டிக் கொள்ள
வேண்டும்.

பின்பு அத்துடன் கற்றாழை சாற்றினை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அடித்து அதனை ஒரு கிளாஸில் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி கற்றாழை
ஜூஸ் ரெடி!!!

எப்போது குடிக்க வேண்டும்?

இதனை காலை வேளையில் குடித்து வருவது மிகவும் நல்லது. . காலை வேளையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிவதுடன்,
உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here